நமது வயிற்றின் ஆரோக்கியம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் நாம் நார்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். அஜீரணம், வயிற்று வலி, மலச்சிக்கல் ஏற்படாமல் இருப்பதற்கு சில உணவுகளை நாம் சாப்பிட வேண்டும்.
ஓட்ஸ்
இதில் வைட்டமின்ஸ், மினரல்ஸ் மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்ட் இருக்கிறது. இதில் உள்ள கரையக்கூடிய நார்சத்து மலச்சிக்கலை குறைக்கும். இது ப்ரீபயாட்டிக் ஆக செயல்பட்டு, குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
ஆப்பிள்
இதில் பெக்டின் என்ற கரையும் நார்சத்து உள்ளது. இது மலச்சிக்கலை நீக்கும். இந்நிலையில் உங்களது நாளை சிறப்பாக தொடங்க ஆப்பிளை சாப்பிட வேண்டும்.
டிரை ப்ரூட்ஸ்
இதில் ஆரோக்கியமான கொழுப்பு சத்து, மெக்னீஷியம், புரத சத்து, நார்சத்து உள்ளது. அத்திப்பழம், பதாமை சாப்பிடலாம்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு
இதில் இரும்பு சத்து, கால்சியம், வைட்டமின்ஸ், நார்சத்து உள்ளது. இந்நிலையில் உங்கள் உணவில் சர்க்கரை வள்ளிக்கிழங்கை நாம் சேர்த்துகொள்ள வேண்டும். இதனால் நன்றாக ஜீரணமாகும் மேலும் மலச்சிக்கலை தவிர்க்கும் .
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“