Advertisment

மாதுளை, ஆரஞ்சு... ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் 6 சூப்பர் உணவுகள்!

அனைத்து வகையான காய்கறிகளையும் நாம் உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மாதுளை, ஆரஞ்சு... ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் 6 சூப்பர் உணவுகள்!

Foods that keep blood vessels healthy - உங்களின் ரத்த ஓட்டம் மற்றும் ரத்த நாளங்களின் ஆரோக்கியம் தான் உங்களின் அழகை, ஆரோக்கியத்தை, வாழ்நாள் நீட்டிப்பை தீர்மானிக்கிறது. எப்போதும் என்ன சாப்பிடுகின்றோம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். நம் மொத்த உடல் எடையில் வெறும் 2% மட்டுமே எடை கொண்ட மூளைக்கு தான் உடலின் இரத்த ஓட்டத்தில் 20% ரத்தம் பாய்கிறது. எனவே ரத்த ஓட்டத்தை சீராக வைக்கும் பழங்களை, காய்கறிகளை, கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

Advertisment

ப்ரக்கோலி, முட்டைக்கோசு மற்றும் முளைக்கட்டிய தானியங்கள் மட்டுமே ஆரோக்கியமான உணவு என்று அர்த்தமல்ல. அனைத்து வகையான காய்கறிகளையும் நாம் உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த 6 வகையான உணவுகள் உங்களின் இரத்த ஓட்டத்தை சீராக்கும் உணவுகளாகும்.

மாதுளை

நெடுங்காலமாக மாதுளை மக்களால் உணவாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதில் இருக்கும் பைட்டோகெமிக்கல்ஸ் காரணமாக வலுவான ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு ஆற்றலை மனிதர்களுக்கு வழங்குகிறது. இதயத்திற்கு நன்மை பயக்கும் வகையில் பல்வேறு ஊட்டச்சத்துகளை இந்த பழங்கள் கொண்டுள்ளது. வீக்கத்தைக் குறைக்க உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இந்த பழத்தில் உள்ளது. இந்தியாவில் முதன்மை உணவாக கருதப்படும் இந்த பழம் நோய்வாய்பட்டிருக்கும் நபர்களுக்கு உணவாக வழங்கப்படுகிறது. நம்பிக்கையின் விதை என்று இந்த பழத்தை ஹார்வர்ட் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நைட்ரேட்டுகள் நிறைந்த மாதுளைகள் வாசோடைலேட்டிங் விளைவைக் கொண்டுள்ளன. இது இரத்த ஓட்டத்தை அதிகரித்து இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

பீட்கள் மற்றும் நைட்ரேட் அதிகம் உள்ள உணவுகள்

மாதுளையைப் போலவே, பீட்ஸிலும் நைட்ரேட் நிறைந்துள்ளது, இது உங்கள் உடல் நைட்ரிக் ஆக்சைடை ஒருங்கிணைக்க உதவுகிறது. நைட்ரிக் ஆக்சைடு இரத்த நாளங்களின் சுவர்களை தளர்த்துகிறது, இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது இரத்த அழுத்தத்தை சீராக வைக்கிறது. வெந்தயம், முருங்கைக் கீரை, பாலக் கீரை, ஃபென்னல், முள்ளங்கி, முட்டைக்கோஸ் மற்றும் பார்ஸ்லி போன்ற நைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளையும் உங்கள் வாராந்திர உணவுத் திட்டத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும்.

பெர்ரி

எல்லாஜிக் என்ற பைட்டோகெமிக்கல் ஸ்ட்ராபெரிகள் மற்றும் ராஸ்பெர்ரி பழங்களில் இருக்கிறது. இதில் இருக்கும் ஆண்டிஆக்ஸிடண்ட் புற்றுநோயை எதிர்த்து போராடும் தன்மை கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. இந்த எலாஜிக் அமிலம் புற்றுநோயை உண்டாக்கும் சில பொருட்களை செயலிழக்கச் செய்து, புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் குறைக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பெர்ரிகளுக்கு சிவப்பு மற்றும் ஊதா நிறத்தை அளிக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட் ஆந்தோசயனின், தமனிகளை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது மற்றும் அவை மிகவும் கடினமாக மாறாமல் தடுக்கிறது. இரத்த ஓட்டத்திற்கு உதவும் மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் நைட்ரிக் ஆக்சைடு வெளியீட்டைத் தூண்டுவதன் மூலம் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.

மீன்

மீன் எண்ணெய் மனிதர்களில் பெரிஃபெரல் கேபிலரி இரத்த அணுக்களின் வேகத்தை அதிகரிக்கிறது. என்-3 கொழுப்பு அமிலங்களைக் கொண்ட மீன் எண்ணெய்கள் விட்ரோவில் இரத்ததட்டுகளின் திரட்டலைக் குறைக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். சால்மன், டுனா, கானாங்கெளுத்தி, மத்தி போன்ற மீன்களில் காணப்படும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இரத்த நாளத்தில் நைட்ரிக் ஆக்சைடை வெளியிடுவதை ஊக்குவிக்கிறது. இதன் மூலம் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

சிட்ரஸ் பழங்கள்

வைட்டமின் சி நிறைந்திருப்பதைத் தவிர, சிட்ரஸ் பழங்களில் ஃப்ளாவோனோய்டுகள் அதிகமாக காணப்படுகிறது. இது இரத்த அழுத்தத்தைக் குறைத்து நைட்ரிக் ஆக்ஸைடின் உற்பத்தியை அதிகரிக்கிறது.

இந்திய மசாலாக்கள்

இந்தியக் குடும்பங்கள் பூண்டு, மிளகு, கொத்தமல்லி, இஞ்சி, மஞ்சள், இலவங்கப்பட்டை போன்ற மசாலாப் பொருட்களை மிகுதியாகப் பயன்படுத்துகின்றன. இந்த மசாலாப் பொருட்களில் அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகள் உள்ளன, இதனால் கொலஸ்ட்ரால் அளவுகளில் மாற்றியமைக்கும் விளைவுகள் மற்றும் ஆரோக்கியமான இரத்த ஓட்டம் மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகின்றன. எடுத்துக்காட்டாக, காயென்னெ மிளகு நைட்ரிக் ஆக்ஸைடை வெளிவிடுவதை தூண்டுகிறது. இது இரத்த நாளங்களை விரிவுபடுத்துகிறது. மஞ்சல் பல ஆண்டுகளாஅக இரத்த நாளங்களை திறக்கவும், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மஞ்சளில் உள்ள குர்குமின் போன்ற பொருட்கள் நைட்ரிக் ஆக்ஸைடு உற்பத்தியை தூண்டுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment