தலைவலி ஏற்பட்டால் நம்மால் எந்த வேலைகளையும் செய்ய முடியாது. இந்நிலையில் சில உணவுகள் தலைவலியை குறைக்கும். வீக்கத்திற்கு எதிரான பண்புகள் தலைவலியை போக்கும்.
இஞ்சி
இதில் வீக்கத்திற்கு எதிரான பண்புகள் உள்ளது. நாம் டீயில் இஞ்சியை சேர்த்து குடிக்கலாம்.
மெக்னீஷியம் உள்ள உணவுகள்
மெக்னீஷியம் சத்து தலைவலியை போக்கும். பாதாம், விதைகள், முழு தானிங்கள் சாப்பிடுவதால் தலைவலி ஏற்படாது.
வாழைப்பழம்
இதில் மெனீஷியம் மற்றும் பொட்டாஷியம் உள்ளது. ரத்த குழாய்களை சீராக்குகிறது. இதனால் தலை வலி நீங்கும்.
காப்பி
அதிக அழுத்தம் அல்லது டென்ஷனால் தலைவலி ஏற்படும் நபர்கள் காப்பி குடிக்கலாம். காப்பைன் அதிகமாக எடுத்துகொண்டாலும் மீண்டும் மீண்டும் தலைவலி ஏற்படும். அதனால் ஒரு காப்பியோடு நிறுத்திக்கொள்ளுங்கள்.
டார்க் சாக்லேட்
இதில் உள்ள மெக்னீஷியம் ரத்த குழாய்களை நிதானப்படுத்தும். இதனால் தலைவலி நீங்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“