தரமான உணவு பொருள்கள் சாப்பிடுவதன் மூலம் கொழுப்பை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும். ஆரோக்கியமற்ற உணவு பொருள்களை சாப்பிடுவதால் தேவையற்ற கொழுப்புகள் உருவாகின்றன. இதனால் தான் உடலுக்கு பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது.
முதலாவதாக பச்சை காய்கறிகளை அவசியம் சாப்பிட வேண்டும். கொழுப்புகள் இரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்துகின்றன. கீரை வகைகள், முட்டைக்கோஸ், வெங்காயம் போன்றவை சாப்பிடுவதால் கொழுப்பு கட்டுப்படுத்தப்படுகிறது.
பாதாம் பருப்புகளும் தேவையற்ற கொழுப்புகளை குறைக்க பயன்படுகின்றன. இதேபோல், மஞ்சளும் கொழுப்பை குறைக்க பயன்படுகிறதாக ஆய்வுகள் கூறுகின்றன. மேலும், சர்க்கரைவள்ளி கிழங்கு, பூண்டு ஆகிய உணவு பொருள்களும் கொழுப்பை குறைக்கிறது.
எனவே, இவற்றை அடிக்கடி உணவாக எடுத்துக் கொள்வதன் மூலம் தேவையற்ற கொழுப்பை குறைக்க முடியும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“