ஆண்களை விட பெண்களுக்கு 2 சத்துகள் அதிகம் தேவை; இந்த உணவுகளை நோட் பண்ணுங்க; டாக்டர் சிவராமன்

பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம்(pcos) எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்சனைதான். சினைப்பை நீர்க்கட்டிகள் குறித்தும் அதற்கான உணவு முறைகள் குறித்தும் மருத்துவர் சிவராமன் விளக்குகிறார்

பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம்(pcos) எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்சனைதான். சினைப்பை நீர்க்கட்டிகள் குறித்தும் அதற்கான உணவு முறைகள் குறித்தும் மருத்துவர் சிவராமன் விளக்குகிறார்

author-image
WebDesk
New Update
foods to eat to prevent PCOD

ஆண்களை விட பெண்களுக்கு 2 சத்துகள் அதிகம் தேவை; இந்த உணவுகளை நோட் பண்ணுங்க; டாக்டர் சிவராமன்

பி.சி.ஓ.எஸ் எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி சார்ந்த செய்திகளும், தேடல்களும் இன்று இணையத்தில் அதிகம். அதைப்பற்றிய மருத்துவ முறைகளும் வைரலாக இணையத்தில் உலா வருவது வாடிக்கை. சினைப்பை நீர்க்கட்டி இவ்வளவு மிகப்பெரிய பேசும் பொருளாகியுள்ளதற்கு காரணம் என்னவெனில், பெண்களின் மாதவிடாய் சார்ந்த இயல்பான ஹார்மோன் சுழற்சியைக் கலைத்து மாற்றி அமைப்பது தான்.

Advertisment

எந்தப் பொருள் மிக மெதுவாக நீடித்து உடம்பில் கலக்கிறதோ! ரத்தத்துல சர்க்கரையை கலக்க வைக்கிறதோ? அந்த உணவுப் பொருளை லோகிளைசமிக் இண்டெக்ஸ் உள்ள பொருட்கள் என்பார்கள். பட்டை தீட்டாத கைக்குத்தல் புழுங்கல் அரிசி, பட்டை தீட்டாத தவுடு நீக்கப்படாத கோதுமைகள், கீரைகள் போன்ற செரிமானத்திற்கு நீண்ட நேரம் எடுக்கக் கூடிய உணவுகள் இந்தப் பட்டியலில் உள்ளன. இதுபோன்ற உணவுகளைத்தான் சினைப்பை நீர்க்கட்டிகள் உள்ளவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிறார் மருத்துவர் சிவராமன்.

மைதா மாவில் செய்த நான்பரோட்டா, பச்சரிசி பொங்கல் கண்டிப்பாக எடுக்கக்கூடாது. கைக்குத்தல் புழுங்கல் அரிசி எடுத்துக் கொள்ளலாம். பாரம்பரிய அரசி ரகங்களை அன்றாட உணவில் சேர்க்கலாம். சிறுதானியங்களை வாரத்திற்கு 2 (அ) 3 நாட்கள் எடுத்துக்கொள்ளாலாம். தினை அரிசி, ராகி, கம்பு, சோளம், குதிரைவாலி, வரகு போன்ற சிறுதானிய வகைகளை எடுக்கலாம். பெரும்பாலான சிறுதானியங்கள் உடலுக்குத் தேவையான ஆற்றலையும் கொடுக்கும், லோகிளைசிமிக்காக இருந்து வேகமாக உடலில் சர்க்கரையை சேர்க்காமல் பார்த்துக் கொள்ளும் என்கிறார் மருத்துவர் சிவராமன்.

குறிப்பாக பெண்களுக்கு ரொம்ப முக்கியமான சிறுதானியம் ராகியும் கம்பும்தான். ராகி அரிசியில் அதிகளவில் கால்சியம், இரும்புச்சத்தும், பினாலிக் காம்பவுண்ட் உள்ளது. கால்சியமும், இரும்புச்சத்தும் பெண்களுக்கு ஆண்களை காட்டிலும் கூடுதலா தேவை. ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் காலத்தில் பெண்கள் இரும்புச்சத்து இழப்பார்கள். கால்சியம் சத்து இயல்பாகப் பெண்களுடைய எலும்புகள் உறுதிப்படுவதற்கு ரொம்ப முக்கியமாகத் தேவை. எனவே, ராகி அரிசியில் தோசை, உப்புமா போன்ற உணவு செய்து சாப்பிடலாம். சிறுதானியங்களை அன்றாட உணவாக சேர்த்துக் கொள்ளாலாம் என்கிறார் மருத்துவர் சிவராமன்.

Advertisment
Advertisements

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

General health tips

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: