திருச்சி விமான நிலையத்தில் சுமார் ரூ. 1 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெளிநாட்டு பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு சார்ஜாவில் இருந்து ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. இதில் பயணித்தவர்களின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த பயணி ஒருவரை அழைத்துச் சென்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பேரில், அப்பயணி மறைத்து வைத்திருந்த ரூ. 70 லட்சத்து 71 ஆயிரத்து 480 மதிப்புள்ள 780 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், அந்நபரை கைது செய்தனர்.
இதேபோல், சார்ஜாவிற்கு புறப்பட தயாராக இருந்த விமானத்தில் பயணிப்பதற்காக காத்திருந்த பயணிகளின் உடமைகளும் சோதனை செய்யப்பட்டன. இதில் ஒரு பயணி ரூ. 30.08 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தை மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது. அப்பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடத்தலில் ஈடுபட்ட நபரையும் கைது செய்தனர்.
செய்தி - க. சண்முகவடிவேல்