பிரதமராகவே இருந்தாலும் மனைவியை தூக்கித் தான் ஆக வேண்டும்! புகைப்படத்தில் இருப்பவர்கள் யார் தெரியுமா?

கண்முன்னே தனது மனைவியை தூக்கிக் கொண்டே நடந்து நீண்ட தூர சாலையை கடந்தார்.

By: September 18, 2018, 12:09:43 PM

பூடான் நாட்டின் பிரதமர் தனது மனைவியை நீண்ட தூரம் தூக்கிக் கொண்டே சென்ற புகைப்படம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்தியாவுக்கு அருகே இமயமலை சாரலில் உள்ள நாடு பூடான். இந்த நாட்டின் பிரதமர் ஷெரிங் தோபே தனது மனைவியை வெளியில் அழைத்து சென்றார். பிரதமர் என்பதால் காவலர்கள் படையுடன் பிரதமர் மற்றும் அவரது மனைவி இருவரும் காரில் சென்றனர். இந்நிலையில் தான் அவர்கள் சென்ற வழியில் சாலைகள் சேறும் சகதியுமாக காட்சியளித்தனர்.

இதனால், இந்த பகுதியில் கார்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பிரதமர் ஷெரிங் தோபே மற்றும் அவரது மனைவி இருவரும் நடந்து செல்ல முடிவெடுத்தனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் பிரதமர் அனைவரின் கண்முன்னே தனது மனைவியை தூக்கிக் கொண்டே நடந்து நீண்ட தூர சாலையை கடந்தார்.

இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவ தொடங்கினர்.மனைவியை தூக்கிக் கொண்டு நடந்த பிரதமருக்கு பாராட்டுக்கள் குவிய தொடங்கினர். பிரதமரே ஆனாலும் மனைவி என்று வந்து விட்டால் தூக்கித் தான் ஆக வேண்டும் என்று நெட்டிசன்கள் சிலர் வழக்கம் போல் கலாய்த்தும் தங்களது கருத்துக்களை பதிவு செய்துத்துள்ளனர்.

பூடான் பாராளுமன்ற தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் பிரதமரின் ஆளும் கட்சி படுதோல்வி அடைந்தது. எதிர்க்கட்சி வெற்றிபெற்று உள்ளது. பிரதமர் ஷெரிங் தோபே பதவி விலகினார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Former bhutan pm is melting hearts

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X