சமையலறை சிலரை உற்சாகப்படுத்தலாம், ஆனால், சிலருக்கு அவர்கள் இருக்க விரும்பாத ஒரே இடம் அது. இருப்பினும் நீங்கள் அவசரமாக ஏதாவது சமைக்க வேண்டிய நிலைமை கண்டிப்பாக வரும். இதுபோன்ற சமயங்களில், சமைப்பதைத் தொந்தரவில்லாத அனுபவமாக்கும் குறிப்புகள் மற்றும் தந்திரங்ள் இங்குள்ளன.
Advertisment
முன்னாள் மாஸ்டர் செஃப் பங்கஜ் பதூரியா, உங்களுக்கு உதவ சில ஹேக்குகளை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
ஒரு வீடியோவில், காய்கறிகளை வாங்குவது மற்றும் சேமித்து வைப்பது, மென்மையான, பஞ்சுபோன்ற ரொட்டிகள் மற்றும் பூரிகள் செய்வது போன்ற விஷயங்களில் அடிக்கடி கேட்கப்படும் சில கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார், மேலும் நேரத்தை மிச்சப்படுத்த சில எளிய ஹேக்குகளையும் பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த ஹேக்ஸ்
*அழுகுவதைத் தடுக்க, வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கை தனித்தனியாக சேமிக்கவும்.
* சூப்பர் சாஃப்ட் ரொட்டி செய்ய, மாவில் ஒரு சிட்டிகை உப்பு, ஒரு சிட்டிகை எண்ணெய் மற்றும் வெதுவெதுப்பான நீரை சேர்க்கவும். நீங்கள் ரொட்டி செய்வதற்கு முன் மாவை 20 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
*ஏலக்காயை அரைக்கும் போது ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும். அது நன்றாக இருக்கும்.
*காய்கறிகளை செய்தித்தாள்களில் போர்த்தி ஃபிரிட்ஜில் வைப்பதன் மூலம் குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு காய்கறிகளின் அடுக்கு ஆயுளை அதிகரிக்கலாம்.
*பச்சை மிளகாயின் காம்பை நீக்கி, ஒரு டிஷ்யூ பேப்பரில் சுற்றி, காற்றுப்புகாத டப்பாவில், ஃபிரிட்ஜில் வைக்கவும். இது அவற்றை புதியதாக வைத்திருக்க உதவுகிறது.
*உங்கள் கைகளில் இருந்து பூண்டின் வாசனையை அகற்ற, அவற்றை ஸ்டீல் பாத்திரத்தில் தேய்க்கவும்.
*இஞ்சி-பூண்டு பேஸ்ட் செய்யும் போது, இஞ்சி-பூண்டு விகிதத்தை 40:60 ஆக வைத்துக் கொள்ளவும். நீங்கள் பேஸ்டை சேமிக்க விரும்பினால், அதில் சிறிது வெள்ளை வினிகர் சேர்க்கவும்.
*மென்மையான பஞ்சுபோன்ற பூரி செய்ய, மாவை தண்ணீருக்கு பதிலாக பாலுடன் பிசையவும்.
* எடை குறைந்த ஆனால் பெரியதாக இருக்கும் கத்தரியில்’ விதைகள் குறைவாகவே இருக்கும்.
*சாலட் தயாரிப்பதற்கு முன், உங்கள் சாலட் இலைகள் மொறுமொறுப்பாக இருக்க, ஐஸ் வாட்டரில், சில துளிகள் எலுமிச்சை சேர்த்து, அதில் போட்டு வைக்கவும்.
இதில் உங்களுக்கு மிகவும் பயனுள்ள ஹேக் எது?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“