பிறந்த 40 நாட்களில் கால்களை இழந்த பூஜா.. மிஸ் வீல்சேர் இந்தியா ஆனது அவ்வளவு எளிதல்ல!!!

மிஸ் வீல்சேர் இந்தியா 2017 அழகிப்போட்டியில் கலந்துக் கொண்டேன்.

சக்கர நாற்காலில் அழகுப் போட்டியில்  மிஸ்  இந்தியாவாக தேர்ந்தெடுக்கப்பட்ட பூஜா சர்மா  தனது வலி மிகுந்த வாழ்க்கையையும் வர்ணையோடு பகிர்ந்துள்ளார்.

கருவில் இருக்கும் குழந்தை குறித்து எல்லா பெற்றோர்களுக்கும் ஒரு  எதிர்ப்பார்ப்பு இருக்கும். அந்த எதிர்ப்பார்ப்பை  சற்று கூட என் பெற்றோருக்கு பூர்த்தி செய்ய முடியாமல் தான்  நான் இந்த பூமியில் பிறந்தேன்  என்று  தனது வாழ்க்கை பயணத்தை குறித்து பகிர்ந்துள்ளார்  முன்னாள்  மிஸ் வீல்சேர் இந்தியா   பூஜா சர்மா.

”பிறந்த 40  ஆவது நாளில் என் கால்கள் அகற்றப்பட்டன. வாயிலிலே நுழையாத எதோ ஒரு நோய் என்னை தாக்கியதாம். அதனால்  என் கால்களை மருத்துவர்கள் அகற்றினர். அதோடு நான்  நடப்பதையே மறேந்தேன்.  கால்கள் தரையில் பட்டு நடக்கும் போது அந்த உணர்வு எப்படி இருக்கும் என்பதுக் கூட எனக்கு தெரியாது. என் குறைப்பாட்டை நான் முதலில் உணர்ந்தது பிளஸ்2  முடித்து விட்டு நல்ல கல்லூரியை தேடி அலையும் போது தான்.

எத்தனையோ முன்னணி கல்லூரிகள் என்னை புறகணித்தனர்.  எப்படியோ ஒரு கல்லூரியில்  சேர்ந்து படித்து பலதரப்பட்ட அவமானங்களை கடந்து ஒருவழியாக படித்து முடித்தேன். அதன் பின்பு என்ன வேலைத்தான். ஒரு நல்ல  வேலை கிடைக்க நான் அலையாத இடம் இல்லை. போகாத இண்டர்வியூ இல்லை.

அவர்கள் என் திறமைகளை விட என் குறைபாடுகளை மட்டுமே ஆர்வம் கொண்டிருந்தார்கள்.   எனக்கு இதுயெல்லாம்  ஒரு சவால் நிறைந்த பயணமாகவே தான்  இருந்தது. ஆனால், என்னையே அறியாமல் நான் தேம்பி தேம்பி அழுதது அன்று தான். ஒருநாள் என் நண்பர்களின் வீட்டிற்கு சென்றிருந்தேன். இரவு நேரம் ஆகிவிட்டதால் தனியாக செல்ல முடியாது என்று கால் டெக்ஸிக்கு ஃபோன் செய்து அழைத்தேன்.

அவர்கள் வந்தார்கள், ஆனால் என்னை பார்த்து விட்டு உங்களை ஏற்றிக் கொண்டு செல்ல முடியாது என்று என்னை நிராகரித்தனர் அப்போது தான் என்னிடம் இருக்கும் குறையை நினைத்து நான் தேம்பி தேம்பி அழுதேன். அடுத்த சில நாட்கள் கழித்து தான் மிஸ் வீல்சேர் இந்தியா 2017 அழகிப்போட்டியில் கலந்துக் கொண்டேன். அங்கு வந்த என்னை போல் வந்தஎல்லோரையும் பார்க்கும் போது எனக்கு என் தன்னம்பிக்கை அதிகரித்து, தனிமை நகர்ந்தது.

"I was forty days old when I was operated on to save my legs. The nerve damage was so extensive that every doctor my…

Posted by Humans of Bombay on 29 एप्रिल 2018

என் குறைபாடுகளை தாண்டி, என் ஆற்றலும் எனது திறமையும் அங்கு பேசியது. பட்டத்தை வென்றேன். எதோ உலகத்தையே வென்றது போல் ஒரு உணர்வு.  அப்போது நடக்கும் மனிதர்களை பார்க்கும் போது, அவர்கள் நடப்பதாகவும், நான் மட்டும் பறப்பதாக எனக்கு தோன்றியது.

முதலில் என் சக்கர நாற்காலியை பார்ப்பவர்கள் என்னை வெறுப்பார்கள். என்னிடம் பேசிய பின்பு என்னை ரசிப்பார்கள். உங்களை போல்”….

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close