/tamil-ie/media/media_files/uploads/2020/11/energy-ladoo_1200_ambika-shetty.jpg)
Four Ingredients easy laddo recipe healthy snacks
Four Ingredients Energy Balls Laddo Diwaly Special Recipe : வீடு, அலுவலகம் என ஓடிக்கொண்டிருக்கும் நாளுக்கு இடையில் இன்ஸ்டன்ட் எனர்ஜி பெறக் கடைகளில் கிடைக்கும் எனர்ஜி பார்களுக்கு (Bar) பதிலாக இனி வீட்டிலேயே சத்தான லட்டு செய்யலாம். வீட்டு உணவை உட்கொள்வதன் நன்மைகளைவிட வேறெதுவுமில்லை. அப்படிதானே!?
அம்பிகா ஷெட்டியின் இந்த வித்தியாச மற்றும் சத்தான ரெசிபியை செய்து, இந்த தீபாவளியை ஆரோக்கியமானதாக்குங்கள். 10 நிமிடத்தில் சட்டெனத் தயாராகும் இந்த ஸ்பெஷல் ரெசிபிக்கு வெறும் நான்குப் பொருள்கள்தான் தேவைப்படும்.
தேவையான பொருள்கள்:
பொடியாக நறுக்கிய அக்ரூட் பருப்புகள் அல்லது வால்நட்ஸ் - 1 கப்
கொட்டை நீக்கப்பட்ட டேட்ஸ் - 1 கப்
நெய் - ½ டீஸ்பூன்
பீனட் பட்டர் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* ஒரு கடாயில் நெய், டேட்ஸ் சேர்த்து நன்கு வறுக்கவும்.
* அதே கடாயில், அக்ரூட் பருப்புகள் சேர்த்து, மூன்று நிமிடங்களுக்கு வறுக்கவும்.
* வறுத்த மற்றும் குளிர்ந்த டேட்ஸை பேஸ்ட்டாக அரைக்கவும்.
* ஒரு பாத்திரத்தில், டேட்ஸ் பேஸ்ட், வறுத்த அக்ரூட் பருப்புகள் மற்றும் பீனட் பட்டர் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.
* சிறிய பந்துகளாக வடிவமைத்தால், சுவையான இன்ஸ்டன்ட் லட்டு ரெடி.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us