திருச்சி, அரங்கநாத சாமி கோயிலில் சாமி தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்கு இலவசமாக நீர் மோர் விநியோகம் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதன்படி, மக்களின் நலனை கருத்திற்கொண்டு தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நீர் மோர் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோரது நடவடிக்கையின் பேரில், திருச்சி அரங்கநாதசாமி கோயிலில் பக்தர்களுக்கு இலவசமாக நீர் மோர் விநியோகிக்கப்படுகிறது. இந்த திட்டத்தை கோயில் இணை ஆணையர் செ. சிவராம்குமார் இன்று (ஏப்ரல் 4) தொடங்கி வைத்தார்.
பக்தர்களின் நலனை கருத்திற்கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த இலவச நீர் மோர் வழங்கும் திட்டத்திற்கு பலரும் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். இது மட்டுமின்றி பக்தர்களுக்காக தரைவிரிப்புகளும் விரிக்கப்பட்டுள்ளன.
செய்தி - க. சண்முகவடிவேல்