மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் இலவச யோகா பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள எப்படி விண்ணப்பிக்கலாம் என்று இங்குப் பார்க்கலாம்.
மன அமைதி மற்றும் முழுமையான ஆரோக்கியத்தை நோக்கமாகக் கொண்டு, மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் இலவச கோடை கால யோகா பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக, அருங்காட்சியக செயலர் கே.ஆர். நந்தாராவ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஏப்ரல் 8 முதல் ஜூன் 10 வரை நடைபெறும் இந்த முகாமில் 10 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கலந்து கொள்ளலாம்.
பயிற்சி விவரங்கள்:
நாட்கள்: வாரந்தோறும் செவ்வாய், வியாழன், சனி
பெண்கள் மட்டும்: காலை 10:30 - 11:30
அனைவருக்கும்: மாலை 4:30 - 5:30
இந்த பயிற்சி உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, ஆஸ்துமா, தூக்கமின்மை, தைராய்டு, ஹார்மோன் சமன்பாடு பிரச்சினைகள், உடல் பருமன் குறைப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும். பயிற்சியை முழுமையாக முடிக்கும் அனைவருக்கும், ஜூன் 21 – உலக யோகா தினத்தில் சான்றிதழ் வழங்கப்படும்.
எப்படி விண்ணப்பிக்கலாம்?
இலவசமாக யோகா பயிற்சி பெற்று ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்புவோர், 99941 23091 என்ற தொடர்பு எண் மூலம் உடனே பதிவு செய்யலாம். பதிவு செய்ய கடைசி தேதி ஏப்ரல் 5 ஆகும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.