ஃப்ரீசர் உணவைப் புதியதாகவும், பல மாதங்களுக்கு கெட்டுப்போகாமல் பாதுகாப்பாகவும் வைத்திருக்கும் என்று பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள். ஆனால், இது எப்போதும் அல்ல.
Advertisment
உங்கள் ஃப்ரீசரில் ஒரு விநோதமான வாசனையை நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? இது எங்கிருந்து வருகிறது மற்றும் இந்த சிக்கலை சரிசெய்ய என்ன செய்வது?
உங்கள் ஃப்ரீசரில் இருந்து துர்நாற்றம் வருவதற்கு பாக்டீரியா, ஈஸ்ட் என பல காரணங்கள் உள்ளன. நுண்ணுயிரிகளின் வளர்ச்சி மட்டுமல்ல, ஃப்ரீசரில் ரசாயன செயல்முறைகளும் விரும்பத்தகாத நாற்றங்களுக்கு வழிவகுக்கும்.
டொமஸ்டிக் ஃப்ரீசர் பொதுவாக ஃபிரிட்ஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளன, மேலும் இது அமைப்புகளின் வழியாக வாசனையை நகர்த்த மற்றொரு வாய்ப்பை வழங்குகிறது. இரண்டு யூனிட்களும் ஒரே கூலிங் சொர்ஸையும், ஏர் ஃப்ளோ சேனலையும் பகிர்ந்து கொள்கின்றன. உங்கள் ஃபிரிட்ஜில் உள்ள உணவில் இருந்து துர்நாற்றம் வந்தால், அவை உங்கள் ஃப்ரிசருக்கு இடம்பெயர வாய்ப்புள்ளது.
Advertisment
Advertisement
உங்கள் ஃப்ரீசரில் வாசனை வராமல் இருக்க சில எளிய வழிமுறைகள் உள்ளன.
முதலில், உணவை சரியா மூடுவதன் மூலம் நாற்றத்தை உருவாகாமல் தடுக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் உணவை காற்று புகாத பாத்திரத்தில் வைத்தால் (கண்ணாடி சிறந்தது), அது பாக்டீரியா அல்லது உணவின் மூலம் உற்பத்தி செய்யப்படும் நாற்றத்தை வெகுவாகக் குறைக்கும். உணவுகள் மூடியிருக்கும் போது அதைச் சுற்றியுள்ள மற்ற உணவுகளிலிருந்து வாசனைகளை உறிஞ்சுவதற்கான வாய்ப்புகள் குறைவு.
வாசனை ஏற்கனவே பரவியிருந்தால், முழுமையான சுத்தம் செய்வது உட்பட சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் அவற்றை அகற்றலாம்.
ஃப்ரீசரில் இருந்து அனைத்து பொருட்களையும் அகற்றவும், உணவுகள் கெட்டுப் போகின்றனவா, ஃப்ரீசர் எரிந்திருக்கிறதா அல்லது விரும்பத்தகாத நாற்றங்கள் உள்ளதா எனப் பரிசோதிக்கவும். ஐஸ் கட்டிகளை உருவாக்கிய எதையும் தூக்கி எறியவும். மேலும் நீங்கள் ஃபிரிட்ஜை பரிசோதித்து, துர்நாற்றம் வீசும் உணவுகளை அப்புறப்படுத்த வேண்டும்.
நீங்கள் அனைத்து பொருட்களையும் அகற்றியவுடன், அலமாரிகளை வெளியே எடுத்து, ஃபிரிட்ஜை சுத்தம் செய்யவும். வெதுவெதுப்பான சோப்பு நீர் அல்லது இரண்டு தேக்கரண்டி பேக்கிங் சோடாவை வெதுவெதுப்பான நீரில் கலந்து அனைத்து மேற்பரப்புகளையும் துடைக்கவும்.
அனைத்து அலமாரிகளையும் கழுவவும், அவற்றை முழுமையாக உலர வைக்கவும்.
இந்த எளிய படிகள் மூலம் வாசனை அகற்றப்படாவிட்டால், ஃப்ரீசருக்கு ஒரு ஆழமான சுத்தம் தேவைப்படலாம், இதில் யூனிட்டை அணைத்து, சில நாட்களுக்கு சுவாசிக்க விடுவது அடங்கும்.
உணவைச் சேமிப்பதற்கு முன் ஃப்ரீசரில் சிறிது பேக்கிங் சோடாவை வைப்பது எஞ்சியிருக்கும் நாற்றங்களை உறிஞ்சுவதற்கு உதவும். இருப்பினும் கடுமையான வாசனைகளுக்கு, உங்களுக்கு ஒரு தொழில்நுட்ப நிபுணர் தேவைப்படலாம்.
சுருக்கமாக, ஃப்ரீசர் உணவுகளை "புதியதாக" வைத்திருக்கின்றன என்று நாம் நினைத்தாலும், நுண்ணுயிரிகள் இன்னும் அங்கு பெருகக்கூடும். உங்கள் உணவைப் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க, உங்கள் ஃப்ரீசரை இப்போதே சுத்தம் செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil