French fries recipe, french fries recipe in tamil : ஃப்ரன்ச் ஃப்ரைஸ். இந்த டிஷ பிடிக்காதுன்னு யாருமே சொல்ல மாட்டாங்க.
Advertisment
தியேட்டர், ஹோட்டல், ஸ்நாக்ஸ் ஷாப் என எங்கு போனாலும் மெனு கார்டில் முதலிடத்தில் இருக்கும் டிஷ் ஃப்ரன்ச் ஃப்ரைஸ் தான். அதுவும் குழந்தைகள் பற்றி கேட்கவே வேண்டாம்.
அது என்னவோ இந்த ஃப்ரன்ச் ஃப்ரைஸ் என்றால் குழந்தைகளுக்கு அப்படி ஒரு அலாதி. சரி எப்ப பார்த்தாலும் வெளியே போய் வாங்க முடியுமா என்ன? வீட்லயே செய்ய கத்துகிட்டா எல்லாமே ஈஸி தானா? இன்னிக்கே கத்துக்கலாம் வாங்க.
உருளைக்கிழங்கு - 3
Advertisment
Advertisements
எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்
உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க
தக்காளி சாஸ் - தேவையான அளவு
french fries recipe செய்முறை
உருளைக்கிழங்கை தோல் சீவி 1/2 இன்ச் கனமும் 2 இன்ச் நீளமும் உள்ள துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்குடன் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு எலுமிச்சை சாறு ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும். (இவ்வாறு செய்வதால் உருளைக்கிழங்கு கருக்காமல் வெள்ளையாக இருக்கும்) உருளைக்கிழங்கை வடிகட்டி ஒரு கிச்சன் டவலில் போட்டு ஈரமில்லாமல் துடைத்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் சூடாக்கி அதில் போட்டு பொரித்தெடுக்கவும். அதன் மீது சிறிது உப்பு, மிளகுத்தூள் தூவி தக்காளி சாஸீடன் பரிமாறவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil