நோக்டூரியா ( Nocturia) என்ற நிலை சிலருக்கு ஏற்படும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள், இரவில் பல முறை சிறுநீர் கழிக்க கழிவறை செல்வார்கள்.
இந்நிலையில் இந்த பாதிப்பு இல்லாத நபர்கள் இரவில் 8 மணி நேரம் தூக்கம் வரும். ஆனால் இந்த பாதிப்பு ஏற்பட்டால் இரவில் 2 முதல் 6 முறை சிறுநீர் கழிக்க செல்வார்கள்.
சிறுநீர்ப்பை இறக்கம், சிறுநீர் பையில் உள்ள கட்டி, அல்லது புரோஸ்டேட் சிக்கல் இருப்பவர்களுக்கு இந்த நிலை ஏற்படும். கர்ப்பமாக உள்ள பெண்கள், இதயம் மற்றும் கல்லீரல் செயலிழப்பு உள்ளவர்கள் நோக்டூரியா பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும்.
நாம் வயதாகும்போது, ஆண்டி டையூரிடிக் ஹார்மோன்களை குறைவாக சுரக்கும். இதனால் இரவு முழுவதும், அதிக சிறுநீர் உற்பதியாகும். மேலும் வயதானால் நாம் சிறுநீரை கட்டுப்படுத்த முடியாது.
55 வயது முதல் 84 வயது வரை உள்ள நபர்கள், வாரத்திற்கு சில நாட்கள் இந்த பிரச்சனையை சந்திப்பதாக தெரிவித்துள்ளனர். அதிக உப்பு சேர்த்து எடுத்துகொள்ளாமல், அதிக ரத்த அழுத்தம் இருக்கும் நபர்களுக்கு இது ஏற்பவதாக உள்ளது.
இரவில் அதிக சிறுநீர் கழிக்கும் நிலை, அதிக ரத்தம் அழுத்தம் உள்ளதால் ஏற்படும். இந்நிலையில் நடந்த ஆய்வில், 40 % பேருக்கு இரவில் அதிக முறை சிறுநீர் கழித்தால் அவர்களுக்கு அதிக ரத்த அழுத்தம் உள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த ஆய்வு ஜப்பானில் நடைபெற்றுள்ளது. ஜப்பானில் ஒரு நாளைக்கு 10 கிராம் வரை உப்பை ஏடுத்துகொள்கிறார்கள். ஆனால் 4 கிராம் வரை உப்பு மட்டுமே எடுத்துகொள்ள வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“