கை வலிக்காம தேங்காய் துருவ சீக்ரெட் டிப்ஸ்: 2 மாதம் ஸ்டாக் வச்சி யூஸ் பண்ணலாம்!
ஆனால், தேங்காயைத் துருவுவது என்பது சமையலில் பலருக்கும் சவாலான வேலை. கடினமான ஓட்டிலிருந்து தேங்காயைச் சுரண்டுவது நேரம் எடுக்கும் வேலையாகவும், சில சமயங்களில் காயங்கள் ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதாகவும் இருக்கும்.
ஆனால், தேங்காயைத் துருவுவது என்பது சமையலில் பலருக்கும் சவாலான வேலை. கடினமான ஓட்டிலிருந்து தேங்காயைச் சுரண்டுவது நேரம் எடுக்கும் வேலையாகவும், சில சமயங்களில் காயங்கள் ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதாகவும் இருக்கும்.
தென்னிந்தியாவின் பல சமையல் வகைகளில் தேங்காயின் பங்கு இன்றியமையாதது. சாம்பார், சட்னி, பொரியல் என எதிலும் தேங்காய் சேர்க்காமல் சமையல் முழுமையடையாது. ஆனால், தேங்காயைத் துருவுவது என்பது சமையலில் பலருக்கும் சவாலான வேலை. கடினமான ஓட்டிலிருந்து தேங்காயைச் சுரண்டுவது நேரம் எடுக்கும் வேலையாகவும், சில சமயங்களில் காயங்கள் ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதாகவும் இருக்கும். ஆனால், இந்த கடினமான வேலையை மிக எளிதாகச் செய்ய ஒரு அற்புதமான வழி இருக்கிறது.
Advertisment
முதலில் தேங்காயை உடைத்து இரண்டு நாட்கள் ஃப்ரீசரில் வைக்க வேண்டும். பிரிட்ஜில் அல்ல, ஃப்ரீசரில் தான் வைக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஃப்ரீசரில் இருந்து எடுத்த தேங்காயை சுமார் 2 மணி நேரம் வெளியே வைத்து, அதன் குளிர்ச்சி குறைய விட வேண்டும். இந்தக் காலகட்டத்தில் தேங்காயைத் தொந்தரவு செய்ய வேண்டாம்.
2 மணி நேரம் கழித்து, ஒரு கத்தியின் உதவியால் தேங்காயை ஓட்டிலிருந்து எளிதாகப் பிரிக்கலாம். அதிக அழுத்தம் கொடுக்கத் தேவையில்லை. தேங்காயின் வெள்ளை பகுதி மட்டுமே தனியாக வரும். ஃப்ரீசரில் இருந்து உடனே எடுத்தால் கடினமாக இருக்கும் என்பதால், 2 மணி நேரம் காத்திருப்பது அவசியம்.
Advertisment
Advertisements
சில தேங்காய்களில் கருப்பு பகுதிகள் ஒட்டியிருக்கும். அவற்றை ஒரு பீலரைப் பயன்படுத்தி எளிதாக நீக்கலாம். முழுவதுமாக நீக்க வேண்டியதில்லை, பெரிய கருப்பு பகுதிகளை மட்டும் நீக்கினால் போதும். சிறிய பகுதிகள் உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை, அவை நிறத்திற்காக மட்டுமே.
சுத்தம் செய்த தேங்காயை மிக்ஸி ஜார் அளவுக்கேற்ப சாதாரணமாக வெட்டிக் கொள்ளவும். வெட்டிய தேங்காய் துண்டுகளை மிக்ஸி ஜாரில் போட்டு, பல்ஸ் மோடில் 2-3 முறை இயக்கவும். தேங்காய் துருவல் போல தயாராகிவிடும்.
துருவிய தேங்காயை ஒரு காற்று புகாத கண்ணாடிப் பாத்திரத்தில் போட்டு, ஃப்ரீசரில் சேமித்து வைக்கலாம். இது பல மாதங்களுக்கு கெட்டுப்போகாது. நமக்குத் தேவையான அளவு தேங்காயை மட்டும் எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். முழு தேங்காயை வெளியே வைத்தால் கெட்டுப்போகும் வாய்ப்பு அதிகம், ஆனால் இந்த முறையில் துருவல் எப்போதும் ஃப்ரெஷ்ஷாக இருக்கும். ஃப்ரீசரில் வைக்கப்பட்ட துருவிய தேங்காய் கெட்டியாக இருக்கும். ஆனால், அதை அழுத்தி வைக்காமல், சும்மா பரப்பி வைத்தால், தேவையான போது ஸ்பூனால் எளிதாக சுரண்டி எடுத்துப் பயன்படுத்தலாம்.