தேங்காயை வேக வைத்து இப்படி துருவி வைங்க… ஒரு வாரம் ஆனாலும் கெடாது; அப்படியே யூஸ் பண்ணலாம்!
எளிமையான சில வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் ஒரு வாரத்திற்கும் மேலாகப் புத்தம் புதிய தேங்காயை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சேமித்து வைக்கலாம். தேவைப்படும்போது எடுத்துப் பயன்படுத்தலாம்.
எளிமையான சில வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் ஒரு வாரத்திற்கும் மேலாகப் புத்தம் புதிய தேங்காயை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சேமித்து வைக்கலாம். தேவைப்படும்போது எடுத்துப் பயன்படுத்தலாம்.
தேங்காய் சமையலில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால், அதைத் துருவுவது அல்லது அரைப்பது என்பது நேரம் எடுக்கும் வேலை. அதிலும் வேகமாக இயங்கும் நமது வாழ்க்கைமுறையில், வேலைக்குச் சென்றுவிட்டு வந்து சமைக்கும்போது, தேங்காயைத் துருவுவது கடினமான ஒன்றாகத் தோன்றலாம். ஆனால் எளிமையான சில வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் ஒரு வாரத்திற்கும் மேலாகப் புத்தம் புதிய தேங்காயை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சேமித்து வைக்கலாம். தேவைப்படும்போது எடுத்துப் பயன்படுத்தலாம்.
Advertisment
சிரட்டையிலிருந்து பிரித்த தேங்காய் துண்டுகளைச் சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைக்கலாம். பொதுவாக நாம் தேங்காய் துருவும்போது, அதன் சிரட்டை ஒட்டிய பழுப்பு நிறப் பகுதியும் சேர்ந்து துருவப்படும். இது சமையலுக்குப் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றாலும், சுத்தமான வெள்ளை நிறத் தேங்காய் வேண்டுமானால், சிரட்டையிலிருந்து பிரித்த பிறகு, பழுப்பு நிறத் தோலைச் சீவி விடலாம்.
மிக்ஸியில் அரைக்கும்போது கவனிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்கள்:
Advertisment
Advertisements
தண்ணீர் சேர்க்கக் கூடாது: அரைக்கும்போது தண்ணீர் ஊற்றக் கூடாது.
அதிக நேரம் அரைக்கக் கூடாது: மிக்ஸியின் அதிவேக மோட்டார் தேங்காயை விரைவாகச் சூடாக்கிவிடும். இது தேங்காய்க்கு நல்லதல்ல. 10 முதல் 15 வினாடிகள் (அல்லது 10 முதல் 15 எண்ணிக்கைகள்) வரை அரைத்தாலே போதுமானது. தேங்காய் துருவியது போன்ற பதம் வந்துவிடும்.
அரைத்த தேங்காயை ஒரு காற்று புகாத டப்பாவில் (airtight container) போட்டு, மூடி போட்டு மூடி வைத்து, குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால், ஒரு வாரம் வரை புத்துணர்ச்சியுடன் கெடாமல் இருக்கும். தேங்காயைப் பயன்படுத்தும்போது, கைகளால் தொடாமல், ஒரு சுத்தமான ஸ்பூன் மூலம் எடுக்கவும். இப்படிச் செய்தால் மேலும் பல நாட்களுக்குக் கெடாமல் பாதுகாக்கலாம்.