friday cinema news : எப்படி இருந்த இவர்கள் இப்படி ஆயிட்டாங்க! என்ற கேள்வி தமிழ் சினிமாவில் சில நடிகர், நடிகைகளை பார்த்தால் கண்டிப்பாக கேட்க தோன்றும். இவர்களின் முதல் படங்களை எடுத்து பார்த்தால் வேறு மாதிரி இருப்பார்கள். அதுவே இப்போது பார்த்தால் டோட்டலாக அப்படியே சேன்ஞ் ஓவர் மேக் ஓவர். எப்படி? எல்லாம் பணம், புகழ், ராசி, உழைப்பு தான் காரணம்.
சினிமாவில் நடித்து ஒரு ஹிட் கொடுத்து விட்டால் போதும் பிரபலங்களின் வாழ்க்கை அப்படியே தலைகீழாக மாறி விடும். வாய்ப்பு தேடி அலைந்த காலத்தில் இருப்பது போலவா இப்போது இருக்கிறார்கள் என்று புலம்பாத இயக்குனர்களே இல்லை. திரையில் இவர்களை பார்த்த பின்பு ரசிகர்களுக்கு ஏற்படும் ஈர்ப்பு தான் நடிகர் நடிகைகளின் மிகப் பெரிய வெற்றிக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் கொண்டாடினாள் இவர்கள் ஹீரோ. இல்லையா ஜீரோ உடனே ஒரங்கட்டப்பட்டு விடுவார்கள்.
இன்றைய ஃபோட்டோ கேலரி செய்தியில் நாம் பார்க்க இருப்பது இது தான். நடிகர் நடிகைகளின் ரீவைண்ட் கேலரி.
1. காஜல் அகர்வால்:
தமிழில் பழனி படம் மூலம் அறிமுகமான காஜல் இன்று இருக்கும் இடமே வேற. தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக சினிமா துறையில் டாப் ஹீரோயின்கள் லிஸ்டில் இருந்து வருகிறார். அவரின் முதல் படத்தில் எப்படி இருக்கிறார் பாருங்கள்.
2. அமலா பால்:
அமலா பால் சென்சேஷ்னல் ஹீரோயின். இவரின் முதல் படமான சிந்து சமவெளி டூ ஆடை எவ்வளவு மாற்றம் என்பது அவரின் அழகு மற்றும் நடிப்பிலேயே அப்பட்டமாக தெரியும்.
3. த்ரிஷா:
இளமை என்றால் த்ரிஷா தான். தனது உடலை கட்டுப்கோப்பாக வைத்து கொள்வதில் முழு கவனம். ஆனால் அப்போது இருந்த த்ரிஷாவை இப்போது இனி பார்க்கவே முடியாது போல. அவ்வளவு மாற்றம்!
4. சூரி
ஹீரோ, ஹீரோயின்கள் மேக் ஓவர் பெரிய புரட்சி இல்லை பாஸ். காமெடியனாக இருந்து இன்று சிக்ஸ் பேக்குடன் உலா வரும் சூரியின் மாற்றம் அனைவரையும் பொறாமைப்பட வைக்கும் ஒன்று.
5. சிவகார்த்திகேயன்:
இவரின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி தான் இது. மாற்றம் ஒன்றே மாறாதது.
6. அனுஷ்கா:
சத்தியமாக நம்புங்க மக்களே இது நம்ம அனுஷ்கா தான். தெலுங்கில் இருந்து தமிழில் தனக்கென தனி ராஜ்ஜியத்தை அமைத்துக் கொண்ட அனுஷ்காவின் முதல் படத்தில் எடுக்கப்பட்ட ஃபோட்டோ ஷூட் புகைப்படம் தான் இது.