இன்றைய சூழலில் பெரும்பாலானோர் வீடுகளில் ஃப்ரிட்ஜ் இருக்கிறது. முன்னர் ஒரு காலத்தில் ஆடம்பர பொருளாக காணப்பட்ட ஃப்ரிட்ஜ், தற்போது அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது. ஃப்ரிட்ஜில் எத்தனையோ பயன்கள் இருந்தாலும் பிரதானமாக காய்கறிகள், மாவு மற்றும் பால் பொருள்களை வைப்பதற்கு அதனை பயன்படுத்துகிறார்கள்.
ஆனால், ஃப்ரிட்ஜை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற வழிமுறைகள் தெரியாமல் பலர் பயன்படுத்துகின்றனர். சில உணவு பொருள்களை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தக் கூடாது என்ற நிலை இருக்கும் போதும், போதிய விழிப்புணர்வு இல்லாமல் அவற்றை ஃப்ரிட்ஜில் வைக்கின்றனர். அந்த வகையில் ஃப்ரிட்ஜை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தற்போது பார்ப்போம்.
ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாத பொருள்கள் என பல உள்ளன. அவற்றில் குறிப்பாக இஞ்சியை ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது. இதேபோல், பூண்டு, வெங்காயம், உருளை கிழங்கு ஆகியவற்றை தோல் உரித்து ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது. துருவிய மற்றும் உடைத்த தேங்காய் ஆகியவற்றை ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது.
சிக்கன், மட்டன் ஆகியவற்றை ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டிய முறை குறித்தும் அறிந்திருக்க வேண்டும். இவற்றை ஃப்ரிட்ஜில் உள்ள ஃப்ரீசர் பகுதியில் தான் வைக்க வேண்டும். எனினும், ஃப்ரீசரில் வைத்து சுமார் 3 மணி நேரங்களில் அவற்றை எடுத்து சமைத்து விட வேண்டும். அதற்கு மேல் இறைச்சிகளை ஃப்ரீசரில் வைக்கக் கூடாது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“