/indian-express-tamil/media/media_files/2025/07/25/fridgescaping-health-risks-2025-07-25-19-56-59.jpg)
Fridgescaping health risks
சமூக வலைத்தளங்களில் தற்போது ஃபிரிட்ஜ்ஸ்கேபிங் (Fridgescaping) எனப்படும் ஒரு புதிய அலங்காரப் போக்கு வேகமாகப் பரவி வருகிறது. இது வீட்டின் அறைகளை அலங்கரிப்பது போல, ஃபிரிட்ஜின் உட்புறத்தையும் அழகியல் ரீதியாக கவர்ச்சிகரமான இடமாக மக்கள் மாற்ற முயற்சிக்கின்றனர். போட்டோ பிரேம், செடிகள், கூடைகள், ஷோபீஸ்கள் மற்றும் விளக்குகள் போன்ற உணவுப் பொருட்கள் அல்லாத அலங்காரப் பொருட்களை ஃபிரிட்ஜுக்குள் வைப்பது இந்த நடைமுறையில் அடங்கும்.
ஃபிரிட்ஜின் உட்புறம் அலங்காரத்திற்கான இடமல்ல, என்று Fox News இன் மூத்த மருத்துவ ஆய்வாளரும், NYU Langone மருத்துவ மையத்தின் மருத்துவப் பேராசிரியருமான டாக்டர் மார்க் சீகல் எச்சரிக்கிறார்.
ஃபிரிட்ஜை சுத்தமாகவும், ஒழுங்கமைக்கப்பட்டதாகவும் வைத்திருப்பது கவர்ச்சிகரமானதாக இருந்தாலும், சுகாதார நிபுணர்கள் இந்த போக்கில் உள்ள அபாயங்கள் குறித்து தீவிர கவலைகளை எழுப்புகின்றனர்.
ஃபிரிட்ஜ்கேப்பிங் உடன் தொடர்புடைய குறிப்பிட்ட சுகாதார அபாயங்கள் என்னென்ன?
இது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம், கோஷீஸ் மருத்துவமனையின் ஆலோசகர் மருத்துவர் டாக்டர் பல்லேட்டி சிவா கார்த்திக் ரெட்டியுடன் பேசியது.
ஃபிரிட்ஜுக்குள் அலங்காரம் செய்வதன் மூலம் பல உணவுப் பாதுகாப்பு அபாயங்கள் ஏற்படலாம். முக்கியமான கவலைகளில் ஒன்று (Cross-contamination). செடிகள், கூடைகள் அல்லது துணிகள் போன்ற அலங்காரப் பொருட்களை எளிதில் கெட்டுப்போகக்கூடிய உணவுப் பொருட்களுக்கு அருகில் வைக்கும்போது, அவற்றில் பாக்டீரியா அல்லது பூஞ்சை போன்றவை இருக்கலாம், அவை உணவுடன் கலக்கக்கூடும். மேலும், அழகியல் நோக்கங்களுக்காக உணவை திறந்த கொள்கலன்களில் அல்லது சரியாக மூடப்படாத ஜாடிகளில் சேமிப்பது உணவு கெட்டுப்போகும் அபாயத்தையும், பாக்டீரியா வளர்சியையும் அதிகரிக்கிறது. ஏனெனில், சரியாக சேமிக்கப்படாத அல்லது வெளிப்படும் உணவுகளில் தீங்கு விளைவிக்கும் நோய்க்கிருமிகள் வளரக்கூடும், என்று டாக்டர் ரெட்டி விளக்கினார்.
ஃபிரிட்ஜ்ஸ்கேபிங் உணவுப் பாதுகாப்பு இல்லாத பொருட்களை ஃபிரிட்ஜில் பயன்படுத்த ஊக்குவித்தால், அது மோசமான உணவு சுகாதாரத்திற்கும் வழிவகுக்கும். அழகியலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், மக்கள் காலாவதி தேதிகள் அல்லது சரியான உணவு சுழற்சியை கவனிக்காமல் விடலாம், இது கெட்டுப்போன அல்லது பாதுகாப்பற்ற உணவை உட்கொள்ள வழிவகுக்கும், என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஃபிரிட்ஜில் உள்ள அலங்காரப் பொருட்கள் ஒட்டுமொத்த சூழலை எவ்வாறு பாதிக்கலாம்?
டாக்டர் ரெட்டியின் கூற்றுப்படி, ஃபிரிட்ஜ்கள் காற்றோட்டத்தை அனுமதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன, இது முழு யூனிட்டையும் சரியான வெப்பநிலையில் வைத்து உணவுப் பாதுகாப்பை உறுதி செய்கிறது. ஃபிரிட்ஜுக்குள் தேவையற்ற பொருட்களைச் சேர்ப்பது காற்றோட்டத்தைத் தடுக்கலாம் அல்லது சீரற்ற குளிரூட்டலுக்கு வழிவகுக்கும், இதன் விளைவாக சில பகுதிகள் மிகவும் சூடாகி, எளிதில் கெட்டுப்போகும் உணவுகளில் கெட்டுப்போதல் மற்றும் பாக்டீரியா வளர்ச்சி அதிகரிக்கும் அபாயத்தை ஏற்படுத்தும்.
கூடுதலாக, அலங்காரப் பொருட்கள் ஈரப்பதத்தை உறிஞ்சி, ஃபிரிட்ஜின் உள்ளே ஈரப்பதத்தின் அளவை அதிகரிக்கலாம், இது பூஞ்சை மற்றும் பாக்டீரியா வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும். இது பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள் மற்றும் நிலையான, குறைந்த வெப்பநிலையைத் தேவைப்படும் பிற பொருட்களின் புத்துணர்ச்சியைப் பாதிக்கலாம், என்று அவர் கூறினார்.
உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் அதே வேளையில், சுத்தமான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட ஃபிரிட்ஜை பராமரிக்க, டாக்டர் ரெட்டி பின்வரும் உதவிக்குறிப்புகளைப் பரிந்துரைக்கிறார்:
ஃபுட் சேஃப்டி கண்டெய்னர் பயன்படுத்தவும்: உணவை காற்றுப்புகாத, ஃபுட் சேஃப்டி கண்டெய்னரில் சேமிக்கவும், அவை சுத்தம் செய்ய எளிதானவை மற்றும் காலாவதி தேதிகளுடன் சரியாக லேபிள் செய்யப்பட வேண்டும். இது குறுக்கு மாசுபடலைத் தடுத்து, உணவுப் புத்துணர்ச்சியை உறுதி செய்கிறது.
உணவு அல்லாத பொருட்களை வெளியே வைக்கவும்: அலங்காரக் கூடைகள் அல்லது செடிகள் போன்ற உணவு அல்லாத பொருட்களை ஃபிரிட்ஜில் வைப்பதைத் தவிர்க்கவும். தெளிவான பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி கன்டெய்னரை பயன்படுத்தி, எளிதில் பார்க்கக்கூடிய வகையில் ஒழுங்கமைக்கும் முறைகளைப் பின்பற்றவும்.
டெம்பிரேட்சர் ஜோன் அடிப்படையில் ஒழுங்கமைக்கவும்: இறைச்சி மற்றும் பால் பொருட்கள் போன்ற எளிதில் கெட்டுப்போகும் பொருட்களை ஃபிரிட்ஜின் கோல்டர் ஜோன்களில் (பொதுவாக பின் அல்லது கீழ் அலமாரிகள்) வைக்கவும், மேலும் பழங்கள் மற்றும் காய்கறிகளை அதன் புத்துணர்ச்சியைப் பராமரிக்க கிரிஸ்பர் டிராயரில் சேமிக்கவும். காற்றோட்டத்தை உறுதி செய்ய காற்றோட்டங்களைத் தடுக்க வேண்டாம்.
வழக்கமாக சுத்தம் செய்யவும்: மாதம் ஒரு முறையாவது அலமாரிகளையும் லேசான கிருமிநாசினி மூலம் துடைக்கவும். இது பாக்டீரியா அல்லது பூஞ்சை வளர்ச்சியை அகற்ற உதவுகிறது மற்றும் உணவு சேமிப்பிற்கு சுகாதாரமான சூழலை உறுதி செய்கிறது.
உணவை சுழற்சி முறையில் பயன்படுத்தவும்: முதலில் உள்ளதை முதலில் வெளியே (First In, First Out) என்ற முறையைப் பயிற்சி செய்யுங்கள். பழைய பொருட்களை முன்புறம் வைக்கவும், இதனால் அவை முதலில் பயன்படுத்தப்படும், காலாவதியான உணவை உட்கொள்ளும் அபாயத்தைக் குறைக்கும்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.