குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை பிரைடு சிக்கன் சுவைக்காத யாரையும் பார்க்க முடியாது. ஹோட்டலுக்கு போனாலும் சரி, வீட்டில் இருந்தாலும் சரி, ஏதாவது விடுமுறை என்றால், கோழி இறைச்சி வாங்கி, சிக்கன் பொரியல், சிக்கன் குழம்பு, பிரைடு சிக்கன் இப்படி ஏதாவது சமைத்து சாப்பிட்டால் தான் அந்த நாள் முழுமையடையும்.
ஆனால், பிரைடு சிக்கன் எப்படி மீண்டும் சூடுபடுத்துவது என்பது பல வீட்டு சமையலறைகளில் இன்னும் மர்மமாகவே உள்ளது. சில நேரங்களில் ஃப்ரிட்ஜில் இருந்து ஃப்ரெஷ்ஷாக பிரைடு சிக்கனை பலர் ரசிக்கிறார்கள்.
நீங்கள் பிரைடு சிக்கனை மீண்டும் சூடாக்கும் போது, கிரிஸ்பியான வெளிப்புறத்தையும் சதைப்பற்றுள்ள இறைச்சியையும் பாதுகாக்க வேண்டும்.
பிரைடு சிக்கனை மீண்டும் சூடாக்குவது எப்படி?
பிரைடு சிக்கனை பிரிட்ஜில் இருந்து வெளியே எடுத்து 10 முதல் 30 நிமிடங்கள் வெளியே வைக்கவும். இது கோழியை அனைத்து வழிகளிலும் சமமாக மீண்டும் சூடாக்க உதவுகிறது, மேலும் அதிக ஈரப்பதம் இழப்பதைத் தடுக்கிறது.
ஒரு பெரிய, அடிப்பகுதி தட்டையான- வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் சேர்க்கவும். தீயை மீடியம்-ஹை லெவலில் வைக்கவும்.
இடுக்கி பயன்படுத்தி, பிரைடு சிக்கனை எடுத்து எண்ணெயில் மெதுவாக விடவும். ஒவ்வொரு பக்கத்திலும் 2 முதல் 3 நிமிடங்கள் சமைக்கவும். சிக்கனை மொத்தமாக சேர்க்கக் கூடாது. ஏனெனில் இது, எண்ணெயின் வெப்பநிலையை வெகுவாகக் குறைக்கும்.
சிக்கன் மேல்பகுதி மீண்டும் கிரிஸ்பியானதும், சிக்கனை ஒரு கம்பி ரேக்கில் 5 நிமிடங்கள் வைக்கவும். இது சூடு ஆறும்போது அதிகப்படியான எண்ணெயை வெளியேற்ற உதவும்.
இதை மீண்டும் சூடாக்க வேண்டாம்…
இனி ஃபிரிட்ஜில் மீந்து போன பிரைடு சிக்கன் இருந்தால், இந்த குறிப்புகளை பயன்படுத்தி ரி ஹீட் பண்ணுங்க…
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“