Advertisment

1 கப் குடைமிளகாய், தக்காளி: சுவை அள்ளும் சில்லி இட்லி இப்படி செய்து பாருங்க

குடைமிளகாய், தக்காளி சேர்த்த ஃப்ரைடு இட்லி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Food1.jpg

சிம்பிள், சுவையான ஃப்ரைடு இட்லி செய்வது குறித்து இங்கு பார்ப்போம். 

Advertisment

தேவையான பொருட்கள் 

இட்லி மாவு – 2 கப்
இட்லிப் பொடி – 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 2 
குடைமிளகாய்- 1
கறிவேப்பிலை – சிறிதளவு 
கொத்தமல்லி – சிறிதளவு 
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
தக்காளி- 1
பச்சை மிளகாய்- 2
சாம்பார் பொடி- 1 டீஸ்பூன்

செய்முறை 

முதலில் இட்லி மாவைக் கொண்டு, சிறு சிறு இட்லிகளாக ஊற்றி, வேக வைத்து எடுக்கவும். இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கடலைப் பருப்பு சேர்த்து வதக்கவும். 
அடுத்து பச்சை மிளகாய், வெங்காயம் சேர்தது வதக்கவும்.  இப்போது குடை மிளகாய் சேர்த்து வதக்கி தக்காளி, உப்பு போடவும். தக்காளி வதக்கிய பின் மிளகாய் தூள் மற்றும் சாம்பார் பொடி சேர்க்கவும். இப்போது வேக வைத்த இட்லி சேர்த்து கிளறவும். 3-4 நிமிடம் மசாலாவில் கலக்கும் படி கிளறவும்.  இறுதியாக கொத்தமல்லிதழைகள் தூவி இறக்கவும். அவ்வளவு தான் சுவையான ஃப்ரைடு இட்லி ரெடி. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Food
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment