/tamil-ie/media/media_files/uploads/2020/09/4d9332e8ee57419f2d62facdc1a22217-29.jpg)
fried rice recipe fried rice recipe in tamil
fried rice recipe, fried rice recipe in tamil : தெருக் கடையோ, ஃபைவ் ஸ்டார் உணவகமோ தவிர்க்கமுடியாத ஓர் உணவாகிவிட்டது ஃபிரைடு ரைஸ். சிக்கன், மட்டன், கோபி, மஷ்ரூம், பனீர், முட்டை... என நீள்கிற இந்த வறுத்த உணவு (சாதம்) பலருக்குப் பிடித்த, பலர் அன்றாடம் சாப்பிடுகிற ஒன்று. எளிமையான செய்முறை,
எங்கு வேண்டுமானாலும் கிடைக்கும் என்கிற வசதி, சாப்பிடும்போது கிடைக்கும் அலாதிச் சுவை மற்றும் திருப்தியான உணர்வு ஆகியவை இதன் பக்கம் பெரும்பாலானவர்களைத் திரும்ப வைத்திருப்பதில் ஆச்சர்யம் இல்லை. தொட்டுக்கொள்ள கொஞ்சம் டொமட்டோ அல்லது சில்லி சாஸ் போதுமானது; கூடுதலாக பனீர் மசாலாவோ, சிக்கன், மட்டன் உள்ளிட்ட கிரேவியோ இருந்தால், விருந்துக்குச் சமமானது ஃப்ரைடு ரைஸ்.
செய்முறை: அரிசியை 10 நிமிடங்கள் ஊறவைத்து, இரண்டே கால் கப் தண்ணீர் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மூன்று விசில் வந்ததும் இறக்கவும். வெந்த சாதத்தை ஒரு தட்டில் பரப்பி, கொஞ்சம் ஆலிவ் ஆயில் சேர்த்து ஆறவிட்டு, உதிர்த்து வைக்கவும் (இதனை முதல் நாளே செய்து ஃப்ரிட்ஜில் வைத்துக்கொள்ளலாம்).
கேரட், குடமிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கவும். பனீரைக் கொதிக்கும் நீரில் சிறிது நேரம் ஊறவைக்கவும். மிருதுவானவுடன், கைகளால் உதிர்த்துக்கொள்ளவும். வாயகன்ற ஒரு பானில் (pan), மீதமுள்ள ஆலிவ் ஆயில் சேர்த்து கேரட், குடமிளகாய் சேர்த்து வதக்கவும். வதக்கும்போது சர்க்கரை சேர்த்துக்கொள்ளவும்.
காய் வெந்தவுடன், பனீர், மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கிளறவும். நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்துக் கலக்கவும். வேகவைத்த சாதத்தைச் சேர்த்து, சாதம் உடையாமல் கலந்து இறக்கவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.