friendship day status friendship day : உறவுகளில் தனித்துவம் நிறைந்த ஒன்றாக, என்றும் நிலைத்திருப்பது நட்புதான் . பள்ளி பருவம் முதற்கொண்டே வாழ்வில் தவிர்க்க முடியாத உறவாக அமைவது நண்பர்களும், நட்பும் தான், அத்தகைய நட்பின் வலிமையையும், நண்பர்களின் பங்களிப்பையும் இன்று நினைவு கூறுவது அவசியம்.உடுக்கை இழந்தவன் கைபோலே” என்ற குறளுக்கு ஒப்பாக, இன்பத்தில் மட்டும் அல்லாமல் துன்பத்திலும் நம்மை துவள விடாது, தோள் கொடுக்கும் ஒவ்வொரு நண்பனும் நட்பிற்கு இலக்கணமே.
வாழ்க்கைக்கு ஒரு இலக்கணம், திருமணத்துக்கு ஒரு இலக்கணம், காதலுக்கு ஒரு இலக்கணம் இருக்கும் போது, நட்புக்கு என்று ஒரு இலக்கணம் எழுதி வைக்காத படைப்புகளாக, இந்த உலகத்தின் பாணியில், தனி வழியில், காவியமாக வீறுநடை போட்டுக் கொண்டிருக்கிறது. காதல் வேண்டுமானாலும் தோற்கலாம்; ஆனால், நட்பு தோற்றதாக, கல்வெட்டில் கூட பதிக்கவில்லை வரலாறு.
friendship day status friendship day: நீங்க பாத்தீங்களா?
ஆபத்தில் உதவும் நண்பனே உண்மையான நண்பன் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். நம்மைப் பற்றி முழுமையாக தெரிந்த ஒருவர் தான் நண்பராக இருக்க முடியும். நாம், தவறு செய்யும் போதோ அல்லது தவறான பாதையில் செல்லும் போதோ நமக்கு புத்திமதி கூறி, தவறை எடுத்துச் சொல்லி நம்மை திருத்தி நல்வழிப் படுத்தும் ஒருவர் தான் உண்மையான நண்பன்.
இப்படி எவ்வளவு நேரம் தான் பேசிட்டு இருக்குறது. உயிர் நண்பர்களுக்கு விஷ் பண்ண வேண்டாமா? உடனே ஃபோன் எடுங்க ஸ்டேட்டஸ் போடுங்க> எங்கையும் போய் தேட வேண்டாம்.இன்றைய ட்ரெண்டிங் friendship day ஸ்டேட்டஸை நாங்களே ஷேர் பண்ணி இருக்கோம் பாருங்க.
மறந்து விடாதீங்க ஃப்ரண்ட்ஷி டே. ஸ்டேட்டஸ் போடலனா பெரிய தெய்வ குத்தமா ஆயிடும் இதுவும் டூடே ட்ரெண்டிங் மெசேஜ் தான்பா.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil