சமையலறையில் நேரத்தை செலவிடும் அனைவருக்கும் எல்லா நாட்களும் ஒரே மாதிரியாக இருக்காது. சில நாட்கள் சிறப்பாக இருந்தாலும், பல நாட்கள் மோசமாகி விடுகின்றன. நீங்களும் அந்த ‘கெட்ட கிச்சன் நாட்களில்’ ஒன்றைக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், சில கிச்சன் ஹேக்குகள் இங்கே உள்ளன, அது நிச்சயமாக சமையலை ஒரு மென்மையான அனுபவமாக மாற்றும்.
சமையல் செயல்முறையை விரைவுபடுத்த, இந்த குறிப்புகளைப் பயன்படுத்துவது எப்போதும் சிறந்தது.
பேக்கிங்

பேக்கிங்கிற்கான இன்கிரிடியன்ட்ஸ் கலக்கும்போது ஒரு மரக் கரண்டியைப் பயன்படுத்தினால், மென்மையான கலவை கிடைக்கும் என்று நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். இது பயன்படுத்த மற்றொரு காரணம், இது மற்ற உலோகம் அல்லது பிளாஸ்டிக் ஸ்பூனை விட நன்றாக கலக்கிறது. மரக் கரண்டி வெப்பத்தைக் கடத்தாது என்பதால், கறிகளைக் கிளற இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
ஒரே சீசன் காய்கறிகள்

உலகெங்கிலும் உள்ள சமையல்காரர்கள், ஒன்றாக வளரும் காய்கறிகள் (ஒரே பருவத்தில் அல்லது அறுவடையில்) ஒன்றாகச் சமைப்பது சிறந்தது என்பதை ஒப்புக்கொள்கிறார்கள், ஏனெனில் இதுபோன்ற காம்பினேஷன்’ உணவுகளின் சுவையை அதிகரிக்கும்.
மென்மையான சிக்கன்
கோழியை மென்மையாக்குவதற்கான ஒரு உதவிக்குறிப்பைப் பற்றி நீங்கள் அனுபவம் வாய்ந்த சமையல்காரரிடம் கேட்டால், உடனே இந்த பதில் தான் வரும். கோழி சமைக்கும் போது காய்ந்து விடும் தன்மை உள்ளதால் 48 மணி நேரம் பாலில் ஊற வைக்கவும். பால் இறைச்சியை மென்மையாக்குவது மட்டுமல்லாமல், ஈரப்பதத்தையும் சேர்க்கிறது.
பாஸ்தா

பாஸ்தா தண்ணீரில் கழுவும்போது, அது மாவுச்சத்துக்களை இழக்கிறது, இதன் காரணமாக, சாஸ்’ பாஸ்தாவுடன் நன்றாக ஒட்டிக்கொள்ள முடியாது. எப்பொழுதும் கழுவிய தண்ணீருடன் பாஸ்தாவை சமைப்பது சிறந்தது என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
அதேபோல, பாஸ்தா தண்ணீரில் உப்பு சேர்ப்பது, பாஸ்தாவை சாஸுடன் சேர்த்து கெட்டியான நிலைத்தன்மையுடன் இணைக்க உதவுகிறது, அதே நேரத்தில் சிறந்த சுவையை அளிக்கிறது. இது முழுமையான டிஷை கொடுக்கும்.
குக்கீஸ்

இது பெரும்பாலான மக்கள் அறிந்த ஒரு பொதுவான உதவிக்குறிப்பு, ஆனால் பேக்கிங் குக்கீகள் வரும்போது மிகவும் முக்கியமானது. கெட்டியான குக்கீகளை விரும்புபவர்கள், மாவை ஃப்ரீசரில் குளிர வைக்க வேண்டும்.
பிறகு இரவு முழுவதும் மாவை ஊறவைத்து, குக்கீ கட்டரைப் பயன்படுத்தி குக்கீகளை வெட்டுங்கள். அவற்றை ஓவனில் வைத்து வழக்கம் போல் பேக் செய்யவும். இது மிகவும் தடிமனான குக்கீகளையும் சுவையாகவும் செய்கிறது!
கத்தி
எப்பொழுதும், உங்கள் கத்திகளை கூர்மையாக வைத்திருங்கள், ஏனெனில் இது வெட்டும் வேலையை எளிதாக்குகிறது. மந்தமான கத்தி சமையலறையில் உங்கள் நேரத்தை அதிகரிக்கும்.
மசாலா

நிபுணர்கள் நம்பும் மற்றொரு சமையலறை குறிப்பு, எந்தவொரு மசாலா மற்றும் மூலிகைகளையும் நசுக்குவதற்கு ஒரு சிறிய கல் உரலை பயன்படுத்தவும், ஏனெனில் அது அவற்றின் எண்ணெய் மற்றும் சாறுகளை சரியான முறையில் வெளியேற்றுகிறது. இது உணவுகளின் சுவையையும் அதிகரிக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“