சமையல் ஒரு அழகான பொழுதுபோக்கு. இது நீங்கள் உண்மையிலேயே ரசிக்கக்கூடிய ஒன்று. ஆனால் சில சமயங்களில் மிகவும் குழப்பமாகவும் தோன்றும். குறிப்பாக நீங்கள் நேரம் இல்லாமல் இருக்கும்போது. இதுபோன்ற சமயங்களில், சில ஹேக்குகள் உங்கள் வாழ்க்கையை மிகவும் எளிதாக்கும்.
எனவே, விரைவாக சமைக்கவும், உங்கள் சமையலறையை சிறப்பாக பராமரிக்கவும் உதவும் சில சமையலறை ஹேக்குகள் இங்கே உள்ளன.
எலுமிச்சை சாறு

எலுமிச்சை உங்கள் சமையலறையில் எப்போதும் இருக்கும் ஒன்று. நீங்கள் பிரிட்ஜில் இருந்து அவற்றை வெளியே எடுத்தவுடன் உடனடியாக அதிலிருந்து சாறு பிழிவது எளிதல்ல. ஆனால் நீங்கள் முயற்சி செய்யக்கூடிய ஒரு சிறிய தந்திரம் உள்ளது.
நீங்கள் பிரிட்ஜில் இருந்து எலுமிச்சை எடுத்த பிறகு, நீங்கள் அதை 10 முதல் 20 வினாடிகளுக்கு மைக்ரோவேவ் செய்யலாம். இது குறைந்த முயற்சியில் அதிகளவு சாற்றை பிழிய உதவும்.
உங்கள் சமையலறையை சுத்தம் செய்ய

நாம் அனைவரும் சமைக்க விரும்புகிறோம், ஆனால் அவை சமையலறையில் விட்டுச்செல்லும் கறைகளைப் போக்குவது தலைவலியாக இருக்கிறது. அவற்றை சுத்தம் செய்யவே அதிக நேரம் எடுக்கும். இதற்கு ஒரு எளிய ஹேக்’ பேக்கிங் சோடாவைப் பயன்படுத்துவது.
வினிகர் மற்றும் பேக்கிங் சோடாவை பேஸ்ட்டாக கலந்து, உங்கள் சமையலறை கவுண்டர்டாப் மற்றும் பிளெண்டர் போன்றவற்றில் உள்ள கறைகளை சுத்தம் செய்ய பயன்படுத்தவும். இது உங்களுக்கு சிறந்த முடிவுகளைத் தரும்.
பிரெஷ் புதினா மற்றும் கொத்தமல்லி

கடைகளில் காய்கறி வாங்கும்போது கூடுதலாக, புதினா, கொத்தமல்லி கேட்கும் பழக்கம் நம் அனைவருக்கும் உள்ளது, அவை சமையலின் சுவையை அபரிமிதமாக அதிகரிக்கும்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அவை நீண்ட காலத்திற்கு புதியதாக இருக்காது. அவற்றைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க, காற்றுப் புகாத கண்ணாடிப் பாத்திரங்களில் போட்டு பிரிட்ஜில் வைக்கலாம். இதனால் அவை புதிது போல இருக்கும்.
பீட்சாவை மீண்டும் சூடாக்க

நீங்கள் ஒரு பெரிய பீட்சாவை வைத்திருக்கும் போதெல்லாம், உங்களால் முடிக்க முடியாது, பின்னர் அதை மீண்டும் சூடாக்கி சாப்பிடலாம். இந்த மீதமுள்ள பீட்சாவை கண்ணாடி கண்டெய்னரில் சேமிக்கலாம். இது உங்கள் பீட்சாவை சாப்பிட பாதுகாப்பாக வைக்கும்.
நீங்கள் அதை மீண்டும் சூடாக்கும்போது, உங்கள் மைக்ரோவேவில் சூடாக்க இதே கண்ணாடி கண்டெய்னர் பயன்படுத்தலாம். உங்கள் பீட்சா வறண்டு போகாமல் இருக்க, உங்கள் பீட்சாவுடன் ஒரு கிண்ணத்தில் தண்ணீரை மைக்ரோவேவில் வைக்கவும்.
பிளெண்டர் பிளேடுகளை கூர்மைப்படுத்த
மசாலா, மாவு அல்லது வேறு எந்த உணவாக இருந்தாலும், பிளெண்டர் நமக்கு உதவும். ஆனால் அதிகப்படியான பயன்பாடு அதன் கத்திகளை மழுங்கச் செய்துவிடும். கல் உப்பைப் பயன்படுத்தி உங்கள் பிளெண்டரின் பிளேடுகளை கூர்மையாக வைத்திருக்கலாம். உங்கள் பிளெண்டரில் சிறிது கல் உப்பை வைத்து, உங்கள் பிளேட்கள் கூர்மையாக இருக்க, ஒரிரண்டு முறை அடிக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“