சிறுவயதில் கிச்சன் ஸ்லாப்பில் அமர்ந்து அம்மா சமைப்பதைப் பார்த்தது நினைவிருக்கிறதா? நம்மில் பெரும்பாலோர் சமையல் கற்றுக்கொண்டது அப்படித்தான். இன்று, நாம் அதை வெவ்வேறு நவீன வழிகளில் கற்றுக்கொள்ள முயற்சிக்கிறோம். ஒரு சிலர் யூடியூப் வீடியோக்களைப் பார்த்து சமைக்க முயற்சி செய்கிறார்கள் மற்றும் சிலர் இணையத்தில் இருந்து சமையல் குறிப்புகளைப் பார்க்கிறார்கள்.
நீங்கள் ஒரு சமையல் கலைஞராக இருந்தாலும் சரி அல்லது புதிதாக சமைப்பவராக இருந்தாலும் சரி, உங்கள் நேரத்தையும் சக்தியையும் மிச்சப்படுத்த சில எளிய வழிகள் உள்ளன. தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்!
மூலிகைகளை சேமிக்க
மூலிகைகளை சரியாக எப்படி சேமிப்பது என்பதற்கான ரகசியத்தை அறிய வேண்டுமா? ஒரு டம்ளர் தண்ணீரில் பூக்களை வைப்பது போல, மூலிகளைகளை நேராக, நிமிர்த்து வைக்கவும். நேரடி சூரிய ஒளியில் இருந்து அவற்றைப் பாதுகாக்கவும், தொடர்ந்து தண்ணீரை மாற்றவும். இப்படி செய்வதால் அவை நீண்ட நேரம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
கருகிய பிஸ்கட்
இனி எரிந்த பிஸ்கட்களை தூக்கி எறிய வேண்டாம். கறுகிய பகுதிகளை கவனமாக எடுக்கவும், அவை முற்றிலும் உண்ணக்கூடியது. அவை கொஞ்சம் மோசமாக இருந்தால், பிஸ்கட்களை உருகிய சாக்லேட்டில் நனைத்து, குளிர்விக்க விடவும்.
சர்க்கரை மற்றும் உப்பு
காரமான உணவுகளில் சர்க்கரை மற்றும் இனிப்புக்கு உப்பு சேர்ப்பது, சுவைகளை சமநிலைப்படுத்த ஒரு சிறந்த தந்திரம். சர்க்கரை’ தக்காளி போன்ற பொருட்களின் அமிலத்தன்மையைக் குறைக்கிறது. பேக்கிங்கில், ஒரு சிட்டிகை உப்பு குளூட்டனை வலுப்படுத்தவும், சுவைகளை வெளிக்கொணரவும், கேரமல் அல்லது சாக்லேட்டில் சேர்க்கும்போது ஒரு இனிமையான சுவையான கிக் சேர்க்கிறது. இந்த சால்டட் கேரமல் பிரவுனிகளில் இதை முயற்சிக்கவும்.
உருளைக்கிழங்கை பேக் செய்ய
மைக்ரோவேவில் சமைப்பதன் மூலம் வெளியில் கிர்ஸ்பி ஆகவும், நடுவில் பஞ்சுபோன்றதாகவும் இருக்கும் உருளைக்கிழங்கைப் பெற முடியாது. ஆனால் நேரத்தைச் சேமிக்க நீங்கள் ஒன்றைப் பயன்படுத்தலாம். உருளைக்கிழங்கை ஒரு முட்கரண்டி கொண்டு குத்தி 10 நிமிடங்களுக்கு மைக்ரோவேவ் செய்யவும். பின்னர் கவனமாக சூடான ஓவனில் மாற்றி, தோல் கிரிஸ்பி ஆக, 10-20 நிமிடங்கள் வைக்கவும்.
வெங்காயம், உருளைக்கிழங்கு சேமிக்க
உங்கள் உருளைக்கிழங்கு ஏன் நீண்ட காலம் நீடிக்கவில்லை என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? முதலில் வெங்காயத்தை ஒரு தனி இடத்தில் சேமித்து வைக்கவும். உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் இரண்டும் ஈரப்பதம் மற்றும் வாயுக்களை வெளியிடுகின்றன, இதனால் மற்றொன்று வேகமாக கெட்டுவிடும், எனவே அவற்றை தனித்தனியாக வைத்திருப்பது நல்லது.
சாண்ட்விச்
சொதசொதப்பான சாண்ட்விச்சை யாரும் விரும்ப மாட்டார்கள். தக்காளி அல்லது வெள்ளரிக்காய் போன்றவற்றிலிருந்து வெளியேறும் திரவத்தின் அளவைக் குறைக்க, அவற்றை கிச்சன் பேப்பரின் இரண்டு துண்டுகளுக்கு இடையில் ஐந்து நிமிடங்களுக்கு வைக்கவும்.
இது சாண்ட்விச்களில் சேர்க்கப்படுவதற்கு முன்பு அதிகப்படியான ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும். பட்டர்,சீஸ் அல்லது மயோவை முதலில் ரொட்டியில் பரப்புவது நல்லது - இது உறிஞ்சும் பொருட்களுக்கு எதிராக ஒரு தடையாக செயல்படுகிறது.
பச்சை நிறத்துக்கு
உங்கள் பச்சை காய்கறிகளை பச்சையாக வைத்திருக்க ஒரு எளிய வழி உள்ளது. காய்கறிகளை கொதிக்கும் நீரில் சில நிமிடங்கள் சமைக்கவும் பின்னர் அவற்றை ஒரு கிண்ணத்தில் ஐஸ் தண்ணீரில் மூழ்க வைக்கவும். இது காய்கறிகள் அதிகமாகச் சமைப்பதைத் தடுக்கிறது, இதனால் அவை மிருதுவான அமைப்பையும் நிறத்தையும் தக்க வைத்துக் கொள்ளும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.