/indian-express-tamil/media/media_files/2025/09/06/istockphoto-1768136969-612x612-1-2025-09-06-17-19-08.jpg)
ஆரோக்கியமான உடல் நலத்துக்கு உணவை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு எடுத்துக்கொள்ளும் உணவு சேர்க்கப்படும் பொருட்கள் சுவைக்காக மட்டுமல்லாமல் நம் உடலுக்கும் வலு சேர்க்கும் வகையில் இருக்க வேண்டும். சில நேரங்களில் உணவின் சுவைக்காக சேர்க்கும் பொருட்களின் மருத்துவ பயன்களை தெரிந்து கொள்ளாமலேயே அவற்றை ஒதுக்கி விடுவோம். அந்த வகையில் சமைக்கும் போது உணவில் மணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் பொருளான பூண்டின் பயன்கள் பற்றி தான் நாம் இக்கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.
அலிசின் என்ற ஆன்டிஆக்சிடன்ட் என்ற பொருள் நிறைந்துள்ளதுதான், பூண்டின் சிறப்பு. நோய் எதிர்ப்பு சக்தியையும், ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் செயல்பாட்டையும் அதிகரிக்க செய்வதில் பெரும்பங்கு பூண்டிற்கு உண்டு.
ரத்த சர்க்கரை: அனிமியா பிரச்சனை இருப்பவர்களுக்கு பூண்டு ஒரு வரப்பிரசாதம்.. ரத்த அழுத்தம் மற்றும் ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும். பாலில் பூண்டை சேர்த்து காய்ச்சி குடித்து வந்தால், ரத்த அழுத்தம், மாரடைப்பு அண்டாது. ஒரு டீஸ்பூன் நசுக்கிய பூண்டை சாப்பிட்டு வந்தாலே இதய நோய் அபாயம் குறைகிறதாம்.. உடலில் ஏற்படும் புற்று நோய் செல்கள் அழிந்து விடும்.. எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.
பூண்டு சாப்பிட்டால் ஜீரண சக்தி பெருகும்.. செரிமான கோளாறுகளும் விலகும். உடலிலுள்ள நச்சுப்பொருட்கள் வெளியேறுகிறது.. அந்தவகையில், எடை இழப்புக்கும் பூண்டு அடித்தளமாகிறது. தினமும் 5 பூண்டு பற்களையாவது, பனங்கற்கண்டுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், உடல் பருமன், தொப்பை கரைய துவங்குமாம்.
கொலஸ்டிரால்: உயர் கொலஸ்டிரால் பிரச்சினை இதய நோய்களான , மாரடைப்பு,பக்கவாதம் உள்ளிட்ட கார்டியோ வாஸ்குலர் நோய்கள் முதலாக பல்வேறு ஆரோக்கியப் பிரச்சினைகளுக்குக் காரணமாக அமைகின்றன. இந்த உயர் கொலஸ்டிராலை குறைப்பதில் பூண்டு முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால் இதை சரியான முறையில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியதும் அவசியம்.
கல்லீரல்: பூண்டு ஜூஸ் குடித்து வருவதால், புற்றுநோய் செல்களின் பெருக்கமும் கட்டுப்படுகிறது. ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. இந்த பூண்டு ஜூஸானது, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்துகிறது. தொண்டை புண், இருமல் போன்ற மழைக்கால தொந்தரவையும் நீக்குகிறது. அதனால்தான், "நுரையீரலின் நண்பன்" என்று இந்த பூண்டை சொல்கிறோம்.. கல்லீரல் வீக்க நோயிலிருந்து பாதுகாக்க பூண்டு உதவுகிறது.
வெறுமனே பூண்டு ஜூஸ் குடிக்காமல், மாதுளம்பழம் ஜூஸூடன் கலந்து குடித்தால், நிறைய ஆன்டி ஆக்ஸிடைடிங் சேர்ந்து, ஆரோக்கியத்தை இரட்டிப்பாக்குகிறது. பூண்டை தோலுரித்து கழுவி சுத்தம் செய்து, மிக்சியில் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நைசாக அரைத்து, வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு இஞ்சியையும் அதுபோலவே, தோல் சீவி கழுவி சுத்தம் அரைத்து, வடிகட்டி சாறு எடுத்துக்கொள்ள வேண்டும்.
பூண்டில் உள்ள கந்தக சேர்மங்கள் கல்லீரலில் உள்ள நொதிகளைத் தூண்டி, உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் மற்றும் கழிவுகளை வெளியேற்ற உதவுகின்றன. பூண்டு, கல்லீரலில் உள்ள நொதிகளின் செயல்பாட்டை அதிகரித்து, அவற்றின் நச்சு நீக்கும் திறனை மேம்படுத்துகிறது.
சில ஆய்வுகள் பூண்டு கொழுப்பைக் குறைக்கும் பண்புகளைக் கொண்டிருக்கலாம் என்று கூறுகின்றன, இது கொழுப்பு கல்லீரல் நோய் போன்ற கல்லீரல் பிரச்சனைகளைத் தடுக்க உதவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.