Advertisment

Cape Cobra: கொடிய விஷத் தன்மை உடையது; உணவுச் சங்கிலியை பாதுகாக்கும்! தனித்துவம் வாய்ந்த கேப் கோப்ரா பாம்பு

கேப் கோப்ரா வகை பாம்புகள் அதீத விஷத் தன்மை வாய்ந்தது. இவை தென்னாப்பிரிக்காவில் அதிகளவில் வசிக்கின்றன. இத்தகைய விஷத் தன்மை வாய்ந்த இந்த பாம்பு, உணவுச் சங்கிலியை பாதுகாப்பதாக கூறப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Cape cobra

Cape Cobra

Cape Cobra Key Facts: இயற்கையின் படைப்பில் சிறிய வகை தாவரங்களில் இருந்து மிகப்பெரிய அளவிலான விலங்குகள் வரை இந்த சுற்றுச் சூழலில் வாழ்கின்றன. இவற்றில் பாம்புகளுக்கு முக்கிய இடம் உள்ளது. அந்த வகையில் தென்னாப்பிரிக்காவில் காணப்படும் கேப் கோப்ரா என்ற வகை பாம்பு, அதீத விஷத் தன்மை கொண்டதாக அறியப்படுகிறது. இந்த பாம்பின் தன்மை குறித்து தற்போது காணலாம்.

Advertisment

கேப் கோப்ரா பாம்பின் உடலமைப்பு:

கேப் கோப்ரா வகை பாம்புகள் சராசரியாக 1.2 மீட்டர் முதல் 1.6 மீட்டர் வரை வளரக் கூடியது. சில பாம்புகள் சுமார் 2 மீட்டர் வரையும் வளரும் தன்மை கொண்டவை. இவற்றில் ஆண் பாம்புகள் சற்று பெரிதாக காணப்படும். இவை மஞ்சள் மற்றும் பழுப்பு நிறத்தில் இருக்கும்.

வேட்டையாடி உண்ணும் தன்மை கொண்ட கேப் கோப்ரா:

Advertisment
Advertisement

கேப் கோப்ரா வகை பாம்புகள் பெரும்பாலும் பண்ணைகள் அதிகமாக இருக்கும் பகுதிகளில் காணப்படும். இவை கொறித்துண்ணிகள், சிறிய வகை பறவைகள், பல்லிகள், தவளைகள் போன்றவற்றை உணவாக எடுத்துக் கொள்ளும். இவற்றுக்கு அதிக விஷம் இருப்பதால் எளிதாக தனது இரையை வேட்டையாடும் தன்மை வாய்ந்தவை. இவை வனப்பகுதி முதல் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்கள் வரை எல்லா இடங்களிலும் வாழும் தன்மை உடையது.

கேப் கோப்ராவின் விஷத் தன்மை:

பாம்பு வகைகளில் இதன் விஷத் தன்மை அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது எனக் கூறப்படுகிறது. இதன் விஷத் தன்மை நரம்பு மண்டலத்தை தாக்கி சுவாசக் கோளாறு, தசைகள் செயலிழப்பு போன்றவற்றை ஏற்படுத்தக் கூடும். பாதிக்கப்பட்டவருக்கு விரைவாக மாற்று மருந்து கொடுக்காவிட்டால், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். எனவே, பாம்பு கடித்தவர்களை மிக விரைவாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

கேப் கோப்ராவிற்கு ஆபத்து விளைவிக்கும் விலங்குகள்:

இத்தகைய விஷத் தன்மை கொண்ட கேப் கோப்ராவை, தேன்வளைக் கரடிகள், கீறிகள், கழுகுகள் போன்றவை எளிதாக வீழ்த்தி விடும். இதன் மூலம் கேப் கோப்ரா பாம்புகளின் பெருக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்க இந்த வகை விலங்குகள் உதவுகின்றன.

உணவுச் சங்கிலியில் கேப் கோப்ராவின் பங்கு:

இந்த கேப் கோப்ரா பாம்புகள் உணவுச் சங்கிலியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை பெரும்பாலும் வயல்வெளியில் காணப்படும் கொறித்துண்ணிகள், எலிகள் போன்றவற்றை வேட்டையாடுகின்றன. இதன் மூலம் உணவு சங்கிலியில் சமநிலையை பராமரிக்க கேப் கோப்ரா வகை பாம்புகள் உதவுகின்றன. இந்த வகை பாம்புகள் ஒரே நேரத்தில் 8 முதல் 20 முட்டைகள் வரை இடுகின்றன.

இந்தப் பாம்புகள் மனிதர்களை கடித்தால் காலம் தாழ்த்தாமல் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Snakes Cobra
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment