ஒரே ஊரில் 46 வீடு வாங்கிய தமிழ் நடிகர்; ஆனால் அவர் மனைவி பத்துக்கு பத்து சைஸ் குடிசையில்... யார் தெரியுமா?

தமிழ் சினிமாவின் பொற்காலமான 1940-களில் கோலோச்சிய தலைசிறந்த நடிகர் பி.யு.சின்னப்பா. தனித்துவமான நடிப்பு, இனிமையான குரல், சண்டைக் காட்சிகளில் இருந்த அசாத்தியமான திறமைக்காக "சினிமாவின் முதல் சூப்பர்ஸ்டார்" என்றும் போற்றப்பட்டார்.

தமிழ் சினிமாவின் பொற்காலமான 1940-களில் கோலோச்சிய தலைசிறந்த நடிகர் பி.யு.சின்னப்பா. தனித்துவமான நடிப்பு, இனிமையான குரல், சண்டைக் காட்சிகளில் இருந்த அசாத்தியமான திறமைக்காக "சினிமாவின் முதல் சூப்பர்ஸ்டார்" என்றும் போற்றப்பட்டார்.

author-image
WebDesk
New Update
chinnappa

ஒரே ஊரில் 46 வீடு வாங்கிய தமிழ் நடிகர்; ஆனால் அவர் மனைவி பத்துக்கு பத்து சைஸ் குடிசையில்... யார் தெரியுமா?

தமிழ் சினிமாவின் முதல் சூப்பர்ஸ்டார் எனப்படும் பழம்பெரும் நடிகர் பி.யு.சின்னப்பா, புகழின் உச்சியில் இருந்தபோது கோடீஸ்வரராக வாழ்ந்தும், அவரது மனைவி வறுமையில் வாடி இறந்த துயரச் சம்பவம் குறித்த தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. நடிகர் சிவக்குமார் ஒரு நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்ட இத்தகவல்கள் பலரையும் நெகிழச் செய்துள்ளன.

Advertisment

1930 மற்றும் 40-களில் தமிழ் சினிமாவை ஆட்சி செய்தவர் பி.யு.சின்னப்பா. தமிழ் சினிமாவில் முதன்முதலாக இரட்டை வேடத்தில் நடித்த பெருமையும் இவரையே சேரும். 1916-ல் திருச்சி மாவட்டம் உத்தமபாளையத்தில் பிறந்த சின்னப்பா, தனது 5-வது வயதிலேயே நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். பாடும் திறமையாலும், உணர்ச்சிபூர்வமான நடிப்பாலும் வெகு விரைவில் பிரபலமானார்.

1936-ல் "சந்திரகாந்தா" திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்குள் நுழைந்த அவர், 1940-ல் வெளியான "உத்தமபுத்திரன்" திரைப்படத்தின் மூலம் இரட்டை வேடத்தில் நடித்து, தமிழ் சினிமா வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதினார். "ஆர்யமாலா," "கண்ணகி," "மங்கம்மா சபதம்," "மனோன்மணி" போன்ற வெற்றிப் படங்களில் நடித்த சின்னப்பாவின் பாடல்கள் இன்றும் ரசிக்கப்படுகின்றன.

திரையுலகில் கொடிகட்டிப் பறந்த சின்னப்பா, புகழுடன் சேர்ந்து பெருமளவில் செல்வத்தையும் குவித்தார். புதுக்கோட்டையில் மட்டும் 46 வீடுகளை வாங்கியிருந்ததால், அப்போதைய புதுக்கோட்டை மன்னர், அவர் இனி வீடு வாங்கக் கூடாது என்று உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. அளவுக்கு அதிகமான குடி மற்றும் புகைப்பழக்கமே அவரது திடீர் மரணத்திற்குக் காரணம் என்றும் சொல்லப்படுகிறது. 1951-ல் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்த நிலையில், தனது 35-வது வயதிலேயே அவரது உயிர் பிரிந்தது.

Advertisment
Advertisements

ஆச்சரியமளிக்கும் விதமாக, இவ்வளவு பெரிய நடிகர் இறந்த பின், அவரது மனைவி சென்னை தாம்பரத்தில் உள்ள ஒரு புறம்போக்கு நிலத்தில் 10 அடிக்கு 10 அடி குடிசையில் வறுமையில் வாழ்ந்து வந்திருக்கிறார். இந்த தகவல் எம்.ஜி.ஆருக்குத் தெரியவர, அவர் அந்த நிலத்தை அந்தப் பெண் பெயருக்கு மாற்ற முயன்றிருக்கிறார். ஆனால் அதற்குள்ளாகவே சின்னப்பாவின் மனைவி மரணமடைந்தார். தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த ஒருவரின் குடும்பம் சந்தித்த இத்தகைய துயரம், திரையுலகில் யாரும் எதிர்பாராத ஒரு சோக நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: