ராட்சசன், அசுரன் படங்களில் நடித்து, தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை அம்மு அபிராமி. இப்போது விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 3இல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார்.
Advertisment
இந்நிலையில் நடிகை அம்மு அபிராமி, தன்னுடைய சரும பராமரிப்பு குறித்து ஐபிசி மங்கை யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் போது பகிர்ந்து கொண்டார். அப்போது அம்மு பேசியதாவது;
சினிமாவுக்கு வந்த பிறகு வழக்கமா மேக்கப் போடுறது அவசியமாயிடுச்சு. மேக்கப் போடுறது நம்ம சருமத்தை கண்டிப்பா பாதிக்கும். அதுக்காக நான் தோல் மருத்துவர்கிட்ட போய், அவங்க பரிந்துரைபடி, காலை மற்றும் இரவு சிம்பிளான சரும பராமரிப்பு வழக்கத்தை கடைபிடிச்சுட்டே இருக்கேன். மேக்கப் பிராடக்ட்ஸ் பொறுத்தவரைக்கும் லக்மீ ஐகானிக் காஜல் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுதான் அடிக்கடி நான் யூஸ் பண்றேன். மேக் லிப்ஸ்டிக் பிடிக்கும்.
அதேபோல, முகப்பரு வராம இருக்கிறதுக்கு, என்னோட தோல் மருத்துவர் பரிந்துரை செய்த ஃபேஸ் வாஷ் யூஸ் பண்றேன்.
செட்டாஃபில் மாய்ஸ்சரைசர் பயன்படுத்துறேன். இது நீங்க எந்த மெடிக்கல் ஷாப்லயும் வாங்கலாம்.
எனக்கு பர்ஃபுயூம்ஸ் ரொம்ப பிடிக்கும். நான் நிறைய பர்ஃபுயூம்ஸ் வச்சுருக்கேன். பர்பரி ப்ளஷ் பர்ஃபுயூம் ரொம்ப பிடிக்கும், இன்னும் கொஞ்சம் கம்மியான விலைனா, ப்ளம்- (plum body mist) பிடிக்கும். ட்ரூடெர்மா (truderma), சன்ஸ்கீரின் என்னோட ஃபேவரைட். எப்போவும் நல்ல பிராண்ட் சன்ஸ்கீரின் வாங்கிறது தான் பெஸ்ட்.
ஷாம்பூ அடிக்கடி மாத்திட்டே இருப்பேன். ட்ரெஸ்ஸமீ ஷாம்பூ தான் அடிக்கடி யூஸ் பண்ணுவேன். கண்டீஷனர், சீரம் எல்லாம் யூஸ் பண்ண மாட்டேன். முடிக்கு சின்ன வயசுல இருந்தே, பாராஷூட் தேங்காய் எண்ணெய் தான் யூஸ் பண்றேன்.
அதேபோல, முல்தானிமட்டி, கடலை மாவு ஃபேஸ் மாஸ்க் போடுவேன். அதுல வேற எதையும் சேர்க்க கூடாது. வெறும் முல்தானி மட்டி மட்டும், தண்ணீல மிக்ஸ் பண்ணி, முகத்துல போட்டுப்பேன். ரொம்ப நேரம் வைக்காம, 5 நிமிஷத்துல கழுவினா நல்லா இருக்கும்.
டேனிங் பொறுத்தவரைக்கும், உங்க சருமத்தை டேன் ஆகாம, பாத்துக்கிறது தான் ஒரே வழி. டேன் வந்தபிறகு அதை தடவினா போயிடும், இந்த கிரீம் தடவினா போயிடும் சொல்றதெல்லாம் சுத்த பொய். அதையெல்லாம் நம்பாதீங்க..
டேன் வராம இருக்கணும்னா, சரியா உங்களை கவர் பண்ணிட்டு, சன்ஸ்கீரின் யூஸ் பண்ணிக்கோங்க. இதுதான் உங்களை காப்பாத்தும். அதையும் தாண்டி டேன் ஆனா, அதுவாவே போகணும், நீங்க ஒன்னும் பண்ண முடியாது. அதேபோல கருவளையம் போனுனா நல்ல தூங்குங்க. நிறைய தண்ணீர் குடிங்க.
முகப்பரு பொறுத்தவரைக்கும் நம்ம என்னதான் ஸ்கீன் கேர், டயட், சுத்தம் எல்லாம் கடைபிடிச்சாலும் 1-2 பருக்கள் வரது ரொம்ப நார்மலான விஷயம் தான். அதனால அதுக்காக பெரிசா எதுவும் பண்ணாம, அப்படியே விடுறதுதான் நல்லது. இப்படி அம்மு அபிராமி தன்னுடைய ஸ்கின் கேர் குறித்து ஐபிசி மங்கை யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.