இதய வடிவில் இருக்கும் இந்த பச்சை நிற இலை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.
ஆம், வெற்றிலைதான். எந்தவொரு சுப, துக்க நிகழ்ச்சிகளிலும் வெற்றிலையின் பங்கு மிக அளிப்பரியது.
இந்தியாவில் பல நூற்றாண்டு காலமாக மனித வாழ்க்கையில் வெற்றிலைக்கு என தனி இடம் எப்போதும் இருந்து வருகிறது.
மதிய உணவுக்குப் பிறகு வெற்றிலையைச் சாப்பிடும் பழக்கம் நிறைய பேரிடம் நீங்கள் பார்த்திருக்கலாம்.
குறிப்பாக கிராமப் புறங்களில் வயதானவர்கள் சாப்பிட்ட பிறகு வெற்றிலை எடுத்துக் கொள்வார்கள். ஆயுர்வேத நிபுணர் டாக்டர் தீக்ஷா பாவ்சர் சமீபத்தில் வெற்றிலை பலன்கள் குறித்து சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பதிவு வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
இருமல், ஆஸ்துமா, தலைவலி, மூட்டுவலி, பசியின்மை மற்றும் பலவற்றுக்கு வெற்றிலை அதிக பலன்களைத் தருகின்றன.
வீக்கத்தை போக்குவதற்கும் நல்ல மருந்தாக வெற்றிலை இருக்கிறது. வெற்றிலையில் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. தியாமின், நியாசின், ரிபோஃப்ளேவின் மற்றும் கரோட்டின் மற்றும் கால்சியம் சத்துக்களும் வெற்றிலையில் நிறைந்திருக்கின்றன.
வெற்றிலையை நல்ல வாசம் நிறைந்தவை என்பதால் நீங்கள் வீட்டிலேயே வளர்த்தும் உடல் ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம் என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
வெற்றிலைச் சாறு எப்படி செய்வது என்று பார்ப்போம்.
4 வெற்றிலையை பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.4 ஸ்பூன் குல்கந்த்
1 ஸ்பூன் பெருஞ்சீரக விதைகள்
1 ஸ்பூன் துருவிய தேங்காய்
1 ஸ்பூன் கல் உப்பு
1/4 கப் தண்ணீர்
செய்முறை
மிக்சியில் வெற்றிலையை போட்டு அரைத்துக் கொள்ளவும். பின்னர் தண்ணீரை தவிர்த்து பிற பொருட்களை சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளவும். இறுதியாக, தண்ணீர் கலந்து நல்ல மென்மையாக வரும்வரை கலக்கிக் கொள்ளவும்.
இட்லி, தோசைக்கு ஏற்ற வேர்க்கடலை சட்னி; 10 நிமிடம் போதும்!
வெற்றிலை உடலுக்குச் சூட்டைத் தரக் கூடியவை. ஆனால், வெற்றிலைச் சாறு உடலுக்கு குளுமையைத் தரக் கூடியது. குல்கந்த், தேங்காய், பெருஞ்சீரக விதைகள் ஆகியவற்றை சேர்த்திருப்பதால் அது குளிர்ச்சியைத் தரவல்லதாக மாறி விடுகிறது என்று அந்தப் பதிவில் அவர் வெற்றிலைச் சாறு செய்வதை பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“