Advertisment

உறைந்த தேனை சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? வல்லுநர்கள் கருத்து என்ன?

தற்போது டிக்டாக்கில் #frozenhoneychallenge என்னும் ஹெஷ்டேக் 600 மில்லியன் பார்வையாளர்கள் மத்தியில் பரவலாகி வருகிறது. மேலும், 80 மில்லியன் மக்கள் இந்த சேலஞ்சை மேற்கொண்டுள்ளனர்.

author-image
WebDesk
New Update
frozen honey, frozen honey challenge, forzen honey benefits, experts opinion on frozen honey, diarrhea, headache, உறைந்த தேனை சாப்பிடுவது உடலுக்கு நல்லதா, உறைந்த தேன், வல்லுநர்கள் கருத்து, honey, frozen honey challenge news, frozen honey news

தற்போது டிக்டாக்கில் #frozenhoneychallenge என்னும் ஹெஷ்டேக் 600 மில்லியன் பார்வையாளர்கள் மத்தியில் பரவலாகி வருகிறது. மேலும், 80 மில்லியன் மக்கள் இந்த சேலஞ்சை மேற்கொண்டுள்ளனர்.

Advertisment

இது போன்ற உணவு சார்ந்த டிரெண்ட்களை டிக்டாக்கில் மக்கள் புதிதாக மேற்க்கொள்கிறார்கள்.
இப்போது இது 600 மில்லியன் பார்வையாளர்கள் மத்தியில் பரவலாகி வருகிறது. இந்த சேலஞ்சை 80 மில்லியன் மக்கள் மேற்க்கொண்டுள்ளனர்.

தேனுடன் சர்க்கரையை சேர்த்தால் அவை சிறு கடும் கற்களாக மாறி சற்று கடுமையாக மாறிடும்.
இந்த டிரெண்ட் எவ்வாறு யாரால் தொடங்கியது என்று தெரியவில்லை. இருப்பினும் மக்கள் அவரவர் பாணியில் பல விதமாக மேற்க்கொள்கின்றனர். எனினும் #frozenhoneychallemge மேற்கொள்வது பரிந்துரைப்பதற்கு உரியதா?

குளிர்சாதனப்பெட்டியில் (50 டிகிரி பாரன்ஹீட்) வைக்கப்பட்டுள்ள உறைந்த தேன் அல்லது ‘ராவா’வானதேன் பாதுகாப்பற்றது என்று மும்பை பாட்டியா மருத்துவமனையின் உணவியல் துறைத் தலைவர் டாக்டர் பூஜா தாக்கர் கூறினார். பதப்படுத்தப்படாத தேனில் வித்திகள் மற்றும் க்ளோஸ்ட்ரிடியம் போட்லினம் என்ற பாக்டீரியாக்கள் உள்ளன. இது நரம்பியல் கோளாறுகள் மற்றும் இரைப்பை குடல் நோய்களை ஏற்படுத்தும். நீரிழிவு மற்றும் பழச்சாறு சர்க்கரை ஒவ்வாமை உள்ள நோயாளிகளுக்கு இது பரிந்துரைக்கப்படுவதில்லை என்று அவர் கூறினார்.
அதனைப் பருகுவதால் நரம்பியல் குறைபாடுகளும் வாயு சார்ந்த குறைபாடுகளும் உண்டாகும். அதனால் இதை நீரிழிவு நோயாளிகளுக்கு பரிந்துரைப்பதில்லை. தேனை சிறிதளவு மட்டுமே உட்கொள்ளவது நல்லது. அதிக அளவில் உட்கொள்ளவது சில உபாதைகளைத் தரும் என்று ஆயுர்வேத மருத்துவ பயிற்சியாளர் மருத்துவர் திக்ஷா பவ்சார் கூறுகிறார்.

publive-image

அதிக அளவிலான தேனைப் பருகுவதால் இருமல், அஜீரணக் கோளாறு, உடல் பருமன், தலைவலி, வயிறு கோளாறு முதலியவை ஏற்படும் என்று திக்ஷா எடுத்துரைக்கிறார்.

தேனை எந்தளவு பருக வேண்டும் ?

1 டீஸ்பூன் தேன் போதுமானளவு.

1 டீஸ்பூன் மேல் தேனை கூடுதலாக பருகினால் தோல் சார்ந்த உபாதைகள், இருமல், அஜீரணக் கோளாறு, உடல் பருமன், தலைவலி, வயிறு கோளாறு முதலியவை ஏற்படும்
அது மட்டுமில்லாமல் தேனை சிறிதளவே உட்கொள்ளவது சிறந்தது என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

தேனை எப்படி பருக வேணவேண்டும் ?

தேனை சாதரண பதத்தில் போதுமான அளவில் பருகுவதே நமக்கு இயற்கையான ஊட்டச்சத்தினை வழங்கும் என்று திக்ஷா கூறுகிறார்.

இறுதியாக எந்த டிரேண்டையும் கண்மூடித்தனமாக நம்பி பின்பற்ற வேண்டாம். எதையும் எடுத்துக்கொள்ளும் முன் அதைப் பற்றி மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது சிறந்தது என்று மருத்துவர் கவுர் கூறுகிறார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Food Tips Healthy Food
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment