சமீப காலமாக சமூக வலைத்தளங்களில், உடனடி வலி நிவாரணத்திற்காக, உறைந்த வாட்டர் பாட்டிலை கால்களின் அடியில் உருட்டுவது குறித்த ஒரு புதிய ஹேக் பிரபலமாகி வருகிறது. ஆனால் இந்த முறை உண்மையில் பலன் அளிக்குமா?
மீரா ரோடு வொக்கார்ட் மருத்துவமனையின் எலும்பியல், மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணரும், விளையாட்டு மருத்துவ நிபுணருமான டாக்டர் சைகத் ஜெனா கூறுகையில், ”இந்த உறைந்த பாட்டில் முறை கடுமையான வலி உள்ளவர்களுக்கு ஒரு சிறந்த தற்காலிக நிவாரணமாக இருக்கும் என்று கூறுகிறார். "சுளுக்கு, எலும்பு முறிவு, தசை வலி மற்றும் வீக்கம் போன்ற கடுமையான காயங்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இரத்த ஓட்டத்தைக் குறைக்க எப்போதும் கோல்ட் கம்பிரஸ் பயன்படுத்தப்படுகிறது. இது வலியை மரத்துப்போகச் செய்து, தீவிரத்தைக் குறைக்க உதவும். மேலும், உருட்டும் இயக்கம் தசை இறுக்கத்தை தளர்த்த உதவும்" என்றார்.
குறிப்பாக, காயம் அடைந்த திசுக்களில் செல்லுலார் செயல்பாட்டைக் குளிர் குறைக்கிறது, இது திசு சேதம் மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது. "குளிர்ந்த வெப்பநிலை, நரம்பு சமிக்ஞைகளை மெதுவாக்குகிறது, இதனால் உங்களுக்கு தற்காலிகமாக வலி குறைவாக உணரப்படும்" என்று மெட்ரோ மருத்துவமனையின் எலும்பு மருத்துவ ஆலோசகர் டாக்டர் உதித் கபூர் கூறுகிறார்.
விளையாட்டு காயங்கள் அல்லது உடல் ரீதியான சிரமங்களில் இருந்து உடனடி வலி நிவாரணம் பெற விரும்புவோருக்கு இந்த முறை உதவியாக இருக்கும்.
கடுமையான காயம் ஏற்பட்ட முதல் 48 மணி நேரத்திற்குள்ளோ அல்லது நாள்பட்ட வலி ஏற்படும்போதோ இதை பயன்படுத்தலாம் என்று டாக்டர் கபூர் பரிந்துரைத்தார்.
"புதிய காயம் ஏற்பட்டிருக்கும் போது ஒருபோதும் சூடான ஒத்தடம் கொடுக்க முயற்சிக்காதீர்கள். ஏற்கனவே வீக்கம் இருக்கும்போது, வெப்பத்தை பயன்படுத்துவது வீக்கத்தை அதிகரிக்கலாம். எனவே இந்த ஐஸ் பாட்டில் முறை சில நிவாரணத்தை அளிக்க உதவும்" என்றார் டாக்டர் கபூர்.
எப்படி செய்வது?
ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் முக்கால் பங்கு தண்ணீர் நிரப்பவும்.
மூடி இல்லாமல் அதை உறைய வைக்கவும்.
உறைந்த தண்ணீர் பாட்டிலை வெளியே எடுக்கவும். மூடியை மீண்டும் பொருத்தவும். வீடியோவில் காட்டியபடி உங்கள் கால்களை பாட்டிலின் மேல் மெதுவாக உருட்டவும்.
இருப்பினும், இது நாள்பட்ட வலி அல்லது சில நிலைகளில் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்காது என்பதை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும்.
"உறைந்த பாட்டில் பயனுள்ளதாகத் தோன்றினாலும், அதிகமாகப் பயன்படுத்தினால், பல பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்" என்று டாக்டர் ஜெனா கூறுகிறார்.
உறைந்த நீர் பாட்டிலை நீண்ட நேரம் நேரடியாக சருமத்தில் வைப்பது நரம்புகளை எரிச்சலடையச் செய்து, சரும பாதிப்பு மற்றும் குளிர் கடியை (frostbite) ஏற்படுத்தலாம். "எவ்வளவு நன்றாக உணர்ந்தாலும், உறைந்த பாட்டில்களை மிதமாகப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. 10 முதல் 15 நிமிடங்களுக்கு மேல் பயன்படுத்த வேண்டாம் அல்லது இடையில் ஓய்வு எடுக்கவும்".
உங்கள் சருமத்தைப் பாதுகாக்க ஒரு துணி அல்லது துண்டைப் பயன்படுத்தலாம். வலி மோசமடைந்தால், மருத்துவரை அணுகவும், என்று டாக்டர் ஜெனா கூறினார்.
Read in English: Decoded: The frozen water bottle hack for pain relief