பெரும்பாலான இந்திய நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு, தங்களது அன்றாட வாழ்க்கையில் அலுவலகத்தில் மேல் அதிகாரியின் கண்டிப்பு, குடும்ப நிர்வாகம், குழந்தைகள் படிப்பு, நேர நிர்வாகம், பண நிர்வாகம், வயதான பெற்றோரை கவனித்தல் என பல பிரச்னைகள் வரிசைகட்டி நிற்கின்றன. இதுபோன்ற பிரச்னைகளை சந்தித்தபடிதான் ஒவ்வொரு நாளையும் நகர்த்துகின்றனர். இதனால் மனஅழுத்தத்தோடு, உயர் ரத்த அழுத்தமும் ஏற்படுகிறது. இது இதயக் கோளாறுகளுக்கு வழிவகுக்கிறது. இதைத் தவிர்க்க நமது அன்றாட வாழ்க்கையில் சில சின்னச்சின்ன ஆரோக்கியமான பழக்கங்களைப் பின்பற்றி வந்தாலே போதும், மருந்து மாத்திரைகளின் உதவி இல்லாமலேயே ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம்.
இந்நிலையில், சில பழச்சாறுகளைக் குடிப்பதன் மூலம் இரத்த அழுத்தத்தைக்கட்டுப்படுத்தலாம்.
மாதுளை
மாதுளை பழம் சுவையில் இனிப்பாகவும் அவையே நமது உடலுக்கு எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கிய மருந்தாகவும் உள்ளது. மேலும் இந்த மாதுளம் பழச்சாறைக் குடிப்பதன் மூலம் இரத்த அழுத்தம் குறையும்.
மாதுளம் பழங்களில் ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மைகள் மற்றும் உடலில் ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்கும் திறன் அதிகமுள்ளது. தினமும் காலையில் மாதுளம் பழ சாறு அருந்துபவர்களுக்கு ரத்த அழுத்தம் பிரச்சனை குறைவதோடு, ரத்த அழுத்தம் இல்லாதவர்களுக்கு அது ஏற்படுவதற்கான சாத்தியங்களை தள்ளி போடுகிறதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
குருதி நெல்லி
குருதிநெல்லி அல்லது கிரேன்பெர்ரி என்று கூறப்படும் பழவகையில் அதிக அளவு மேலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் மற்றும் கூயினிக் அமிலம் ஆகியவை செரிமானத்திற்கு உதவுகின்றது. இவை கடுமையான கொழுப்புகளையும் கரைக்க உதவுகின்றது. இதில் அதிக ஃப்ளேவினாய்டு இருக்கிறது. அதிலுள்ள ஆந்தோசயனின் என்ற ஆனி ஆக்ஸிடென்ட் ரத்த அழுத்ததை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதனை ஒரு டம்ளர் அளவு தயாரித்து காலையில் அரை கப் மற்றும் மதியம் அரைக் கப் குடித்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.
ஆரஞ்சு
ஆரஞ்சு பழத்திலுள்ள மிக முக்கிய வைட்டமின் – வைட்டமின் சி. ரத்தக் குழாயின் உட்புறச் சுவர் இவற்றின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி தவிர மிக முக்கியமாக கருதப்படுவது ஆன்டி ஆக்சிடென்ட் எனப்படும் சத்தாகும். மேலும் ரத்தத்தில் கொலஸ்ட்ராலைக் குறைக்கக்கூடிய மிக முக்கிய பொருள் ஆரஞ்சில் உள்ளது என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.