திருமணம் என்று ஆனாலே ஆண்களுக்கு தொப்பை விழுவதும், பெண்களுக்கு இடுப்பு பெருத்துவிடுவதும் பெரும்பாலோனோருக்கு நிகழ்வது. குறிப்பாக 30 வயது ஆனதும் உடல் பருமனை குறைப்பதுதான் பெரும்பாலோனோரின் முதல் டார்கெட்டாக இருக்கும்.
பொதுவாகவே குறிப்பிட்ட வயத்துக்கு பிறகு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு உடல் எடை கூடும். சிலருக்கு உடலில் மற்ற பாகங்களை விட வயிறு பகுதியில் அதிக எடை கூடும். பின் நாட்களில் தொப்பையை குறைக்க அனைவரும் பல முயற்சிகள் மேற்கொள்வோம். உடல் பயிற்சி, உணவு முறை மாற்றம் என அனைத்து மாற்றங்களையும் செய்வோம்.
இவ்வாறு விடா முயற்சியில் ஈடுபடும் உங்களுக்கு எந்த பழங்கள் தொப்பையை குறைக்க உதவும் என்று நாங்கள் கூறுகிறோம்.
இஞ்சி,எலுமிச்சை சாறு :
தினமும் இஞ்சி போட்டு கொதிக்க வைத்த நீர் வெதுவெதுப்பான பின் எலுமிச்சை சாறு கலந்து சர்க்கரைக்கு பதில் தேன் கலந்து குடித்தால் ஒரே வாரத்தில் உடல் எடை குறைவதை கான்பீர்கள். இதிலுள்ள சிட்ரிக் அமிலம், மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்த விட்டமின் சி கொழுப்பை வேகமாக கரைக்கும்.
திராட்சை :
ஒரு ஆராய்ச்சியில் உடலில் உள்ள கொழுப்பை கரைப்பதில் திராட்சை சிறந்த பலனைத் தருகிறது என்பதை உறுதி செய்திருக்கிறார்கள். திராட்சையில் உள்ள கார்போஹைட்ரேட் எனர்ஜியை தருகிறது. காலை உணவுடன் ஒரு கப் கிரேப்ஸ் எடுத்துக்கொண்டால், இவை மற்ற உணவுகளையும் எளிதாக செரிக்கச் செய்திடும்.
அன்னாசிப் பழம் :
உடல் எடையை வேகமாக குறைப்பதற்கு மிகச் சிறந்த பழங்களில் அன்னாசி முக்கியமானது. இதிலுள்ள ப்ரோமைலைன் கொழுப்பை வேகமாக குறைக்கிறது. ஜீரண சக்தியை அதிகமாக்கும். கலோரி மற்றும் கொழுப்பை உடனுக்குடன் எரிப்பதால் உடல் எடை குறைய ஆரம்பிக்கும். அன்னாசிப் பழம் சூட்டைத் தரும், அதனால் அளவாகத்தான் சாப்பிட வேண்டும்.
தக்காளி :
கொழுப்பை கரைப்பதில் தக்காளிக்கு ஈடு கிடையாது என சொல்லலாம். தக்காளி துரிதமாகவும் செயல்படும். இதிலுள்ள லைகோபீன் வேகமகா மெட்டபாலிசத்தை தூண்டுகிறது. இதனல கொழுக்கு சேமிக்காமல் எரிக்கப்படுகிறது தக்காளி சாறு அல்லது சூப்பாக எடுத்துக் கொண்டால் நல்ல பலன் தெரியும்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook
Web Title:Fruits that help in belly weight loss