Fssai shares a simple test to detect the adulteration of sugar in honey
பல வீடுகளில் முக்கிய உணவுப் பொருளாக இருக்கும் தேன்’ ஆரோக்கியம் மற்றும் தோல் பராமரிப்புக்கு பல நன்மைகளை வழங்குகிறது. சர்க்கரைக்கு மாற்றாக பயன்படுத்துவது முதல் ஹேர் மாஸ்க் மற்றும் ஃபேஸ் பேக்குகளில் கலப்பது வரை - இது அன்றாட தேவைகளுக்கு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
Advertisment
எனவே, நீங்கள் தேனைப் பயன்படுத்தினால், சிறிது நேரத்திற்குப் பிறகு அது படிக அல்லது அரை-திட நிலைக்கு மாறுவதையும் நீங்கள் கவனித்திருக்க வேண்டும். தேன் படிகமாக மாறுவதைப் பார்க்கும்போது உங்கள் நினைவுக்கு வருவது என்ன? பெரும்பாலான மக்கள் அதை போலி மற்றும் கலப்படம் என்று நிராகரிக்கிறார்கள், ஆனால் அது அப்படி இல்லை!
தேனின் படிகமாவது’ என்பது உண்மையில் இயற்கையான செயல்முறையே தவிர கலப்படம் அல்லது கெட்டுப்போனதற்கான அறிகுறி அல்ல என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) கூறியது.
“தேன் படிகமயமாக்கல் ஒரு இயற்கையான நிகழ்வு. எனவே, படிகமான தேன் ‘கலப்படம்’ அல்லது ‘கெட்டுப் போனது’ என்பது அவசியமில்லை.
Advertisment
Advertisements
FSSAI தரநிலைகளின்படி, தேனின் நிலைத்தன்மை திரவமாகவோ, பிசுபிசுப்பானதாகவோ அல்லது ஓரளவுக்கு முற்றிலும் படிகமாகவோ இருக்கலாம்.
தேன் ஏன் படிகமாகிறது?
தேன் பல காரணங்களால் படிகமாக மாறலாம். அதில்’ முதன்மையானது பிரக்டோஸ்/குளுக்கோஸ் விகிதம். இது அடிப்படையில் குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் ஆகிய இரண்டு சர்க்கரைகளின்’ சூப்பர்சாச்சுரேட்டட் கரைசல் ஆகும்.
பிரக்டோஸ் கரைந்த நிலையில், குளுக்கோஸ் அதன் படிகமயமாக்கலுக்கு வழிவகுக்கும் குறைந்த கரையும் திறனைக் கொண்டுள்ளது. தேனில் குளுக்கோஸின் அளவு அதிகரித்தால், அது தண்ணீரில் கரையாது.
சேமிப்பு வெப்பநிலை, தேன் எவ்வாறு செயலாக்கப்படுகிறது போன்ற பிற காரணிகளும் படிகமயமாக்கலுக்கு வழிவகுக்கும்.
கலப்படத்தை எவ்வாறு சரிபார்க்கலாம்?
படிகமாக்கப்பட்ட தேன் கலப்படத்தின் அறிகுறி இல்லை என்றாலும், சர்க்கரையுடன் தேனில் கலப்படம் செய்வது பொதுவான நடைமுறையாகும். சர்க்கரையின் இருப்பைக் கண்டறிவது எப்படி என்று நீங்கள் யோசித்தால், FSSAI பகிர்ந்த இந்த எளிய சோதனையை மேற்கொள்ளுங்கள்.
&feature=emb_imp_woyt
* ஒரு கிளாஸில் சிறிது தண்ணீர் எடுத்துக் கொள்ளவும்.
*அதில் சில துளிகள் தேன் சேர்க்கவும்.
* தூய்மையான தேன் தண்ணீரில் கரையாமல், அடியில் படியும்.
*கலப்படம் செய்யப்பட்ட தேன் தண்ணீரில் கரையும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“