Advertisment

வெண்ணெயில் ஸ்டார்ச் கலப்படம்.. கண்டறியும் எளிய சோதனை இங்கே!

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) சமீபத்தில் வெண்ணெயில் கலப்படத்தைக் கண்டறிய எளிய சோதனையை பகிர்ந்துள்ளது- இங்கே பாருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kitchen hacks

Fssai shares simple test to Detect starch adulteration in butter

வெண்ணெயின் நறுமணமும், சுவையும் மிக சாதரண உணவைக் கூட உடனடியாக உயர்த்தி விடும். வெண்ணெய், இந்திய சமையலறைகளில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் காணப்படும் மிகவும் பொதுவான கிச்சன் மூலப்பொருள். ரொட்டி முதல் பராத்தா மற்றும் சூப்கள் வரை - ஒரு துளி வெண்ணெய்’ எண்ணற்ற வழிகளில் அனுபவிக்க முடியும்.

Advertisment

இருப்பினும், பொதுவாகப் பயன்படுத்தப்படும் பல உணவுப் பொருட்களைப் போலவே, வெண்ணெயில் கூட கலப்படம் செய்யப்படலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?

மாவுச்சத்து எனும் ஸ்டார்ச் (Starch), வெண்ணெயில் காணப்படும் மிகவும் பொதுவான வகை கலப்படங்களில் ஒன்றாகும், இது அதிகளவில் உட்கொள்ளும் போது கடுமையான உடல்நல அபாயங்களுக்கு வழிவகுக்கும்.

உங்கள் வெண்ணெயில், கலப்படம் உள்ளதா என்பதை எப்படி அறிவது என்று யோசிக்கிறீர்களா? இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) சமீபத்தில் வெண்ணெயில் ஸ்டார்ச் கலப்படத்தைக் கண்டறிய எளிய சோதனையை பகிர்ந்துள்ளது. பாருங்கள்.

ஒரு கண்ணாடி கிண்ணத்தில் சிறிது தண்ணீர்/எண்ணெய் எடுக்கவும்.

அதில் ½ தேக்கரண்டி வெண்ணெய் சேர்க்கவும்.

கிண்ணத்தில் 2-3 சொட்டு அயோடின் கரைசலை சேர்க்கவும்.

வெண்ணெய் கலப்படமற்றதாக இருந்தால், கரைசலில் நிறமாற்றம் காணப்படாது.

அதுவே கலப்படம் செய்யப்பட்ட வெண்ணெய் கரைசலை’ நீல நிறமாக மாறும்.

நீங்கள் பயன்படுத்தும் வெண்ணெயில் கலப்படம் உள்ளதா? மறக்காமல் இந்த குறிப்புகளை பயன்படுத்தி சோதித்து பாருங்கள்!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment