உணவில் கலப்படம் செய்வது பொதுவான பிரச்சனையாகி விட்டது, இது அன்றாட உணவு பொருட்களை நுகர்வுக்கு தகுதியற்றதாக ஆக்குகிறது. எனவே, கலப்படம் செய்யப்பட்ட உணவு தானியங்களை உட்கொள்வதற்கு முன்பு நீங்கள் கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் அவை உங்கள் ஆரோக்கியத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
இத்தகைய தீங்கு விளைவிக்கும் உணவுப் பொருட்களிலிருந்து அனைவரையும் பாதுகாக்க, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) நாம் உட்கொள்ளும் உணவுகளில் கலப்படம் உள்ளதா என்பதைச் சரிபார்க்க பயனுள்ள சோதனைகளை தொடர்ந்து பகிர்ந்து கொள்கிறது.
இப்போது பலர் நார்ச்சத்து நிறைந்த முழு உணவுகளின் மீது ஈர்ப்பு அடைந்துள்ளனர், இது ஒருவருக்கு நீண்ட நேரம் திருப்தியாக இருக்க உதவும்.
அத்தகைய சத்தான தானியங்களில் ஒன்று ராகி, இது குளுக்கோஸை மெதுவாக இரத்தத்தில் வெளியிடுகிறது, தேவையற்ற பசி உணர்வை தவிர்க்க உதவுகிறது. ஆனால் சிலர் லாபத்துக்காக’ ராகியில் ரோடமைன் கலப்படம் செய்து விற்பனை செய்கின்றனர்.
ரோடமைன் என்றால் என்ன?
இது ஒரு வகை சாயம், நச்சுத்தன்மை வாய்ந்தது மற்றும் நுகர்வுக்கு தகதியற்றது.
சாயம் கலப்படம் எப்படி கண்டிபிடிப்பது?
Detecting Rhodamine adulteration in Ragi#DetectingFoodAdulterants_14#AzadiKaAmritMahotsav@jagograhakjago @mygovindia @MIB_India @PIB_India @MoHFW_INDIA pic.twitter.com/mKvgBd3e5D
— FSSAI (@fssaiindia) November 18, 2021
*ஒரு காட்டன் பால் எடுத்து தண்ணீர் அல்லது தாவர எண்ணெயில் ஊற வைக்கவும்.
*அடுத்து, வீடியோவில் காட்டியபடி’ ராகியை ஒரு கிண்ணத்தில் எடுத்து, அதை காட்டன் பாலில் தேய்க்கவும்.
*கலப்படம் இல்லாத ராகியில் தேய்த்தால் காட்டன் பால் நிறம் மாறாது.
*மாறாக, ராகியில் கலப்படம் இருந்தால் அது சிவப்பு நிறமாக மாறும்.
அடுத்தமுறை ராகி வாங்கும்போது உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், இந்த சோதனையை முயற்சி செய்யவும்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “