உணவில் கலப்படம் செய்வது பொதுவான பிரச்சனையாகி விட்டது, இது அன்றாட உணவு பொருட்களை நுகர்வுக்கு தகுதியற்றதாக ஆக்குகிறது. எனவே, கலப்படம் செய்யப்பட்ட உணவு தானியங்களை உட்கொள்வதற்கு முன்பு நீங்கள் கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் அவை உங்கள் ஆரோக்கியத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
இத்தகைய தீங்கு விளைவிக்கும் உணவுப் பொருட்களிலிருந்து அனைவரையும் பாதுகாக்க, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) நாம் உட்கொள்ளும் உணவுகளில் கலப்படம் உள்ளதா என்பதைச் சரிபார்க்க பயனுள்ள சோதனைகளை தொடர்ந்து பகிர்ந்து கொள்கிறது.
இந்தியாவில் பொதுவாகக் காணப்படும் உணவுக் கலப்படங்களுக்கான பொதுவான வழிமுறைகளைப் பட்டியலிடுவதே இதன் நோக்கமாகும்.
எனவே, உங்கள் கடுகு விதைகளில் ஆர்கெமோன் விதைகள் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க இங்கே ஒரு எளிய சோதனை உள்ளது.
ஆர்கெமோன் விதைகள் என்றால் என்ன?
இது தமிழில் பிரம்மத்தண்டு, நாய்கடுகு அல்லது குருக்கம்செடி என்று அழைக்கப்படுகிறது. இது பாப்பவெராசியே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவரம். ஆர்கெமோன் விதைகள் கடுகு விதைகளுடன் பயிரிடப்படுகின்றன, இவை தோற்றத்திலும் கிட்டத்தட்ட கடுகை ஒத்தே இருக்கும். இருப்பினும், அவை உண்ண முடியாதவை.
ஆர்கெமோன் விதைகள் கலப்பட- எப்படி கண்டறிவது?
Detecting Argemone Seeds Adulteration in Mustard Seeds#DetectingFoodAdulterants_21#AzadiKaAmritMahotsav@jagograhakjago @mygovindia @MIB_India @PIB_India @MoHFW_INDIA pic.twitter.com/Xh0zatDki4
— FSSAI (@fssaiindia) February 4, 2022
செய்முறை
*கடுகை கண்ணாடி தட்டில் பரப்பவும்.
*பூதக்கண்ணாடியைப் பயன்படுத்தி, கறுப்பு நிறத்தில் இருக்கும், கரடுமுரடான மேற்பரப்பு விதைகளை உன்னிப்பாக ஆராயுங்கள்.
முடிவுகள்
*கடுகு விதைகள் மென்மையான மேற்பரப்பைக் கொண்டுள்ளன, மேலும் விரல்களுக்கு இடையில் வைத்து அழுத்தும் போது, உட்புறம் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
* ஆர்கெமோன் விதைகள், கரடுமுரடான மேற்பரப்பு மற்றும் கருப்பு நிறத்தில் இருக்கும். மேலும், அவை உள்ளே வெள்ளை நிறத்தில் இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “