மளிகைப் பொருட்களை வாங்கச் சந்தைக்குச் செல்லும்போது சிப்ஸ், பிஸ்கட் அல்லது பிற நொறுக்குத் தீனி பாக்கெட்டுகளில் வெவ்வேறு வண்ணக் குறியீடுகளை நீங்கள் கவனித்திருக்கலாம். குறிப்பாக, சிவப்பு மற்றும் பச்சை அடையாளங்களின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு, பெரும்பாலானோர் ஒரு பாக்கெட்டை வாங்கலாமா? வேண்டாமா? என்பதை உடனடியாக முடிவு செய்கிறார்கள். ஆனால், இந்த சிவப்பு, பச்சை நிறங்களைத் தவிர வேறு பல வண்ணக் குறியீடுகளும் பாக்கெட்டுகளில் அச்சிடப்பட்டுள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? அவற்றின் உண்மையான பொருள் மிகச் சிலருக்கே தெரியும்.
ஒவ்வொரு வண்ணக் குறியீட்டின் அர்த்தம் என்ன?, எந்த வண்ணப் பாக்கெட்டை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்? என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம். இந்தியாவில் உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையம் (FSSAI) உணவுப் பொருட்களின் சைவ/அசைவத் தன்மையைக் குறிக்கக் குறிப்பிட்ட குறியீடுகளைக் கட்டாயப்படுத்தியுள்ளது. இவை பெரும்பாலான மக்களுக்குத் தெரிந்தவை,
பச்சை நிறம்: உணவுப் பொட்டலத்தில் உள்ள பச்சை நிறக் குறியீடு (சதுரத்திற்குள் புள்ளி) இந்த உணவுப் பொருள் முற்றிலும் சைவம் என்பதைக் குறிக்கிறது. இதன் பொருள், அதைத் தயாரிக்கும்போது, இறைச்சி, முட்டை அல்லது வேறு எந்த விலங்குப் பொருட்களும் சேர்க்கப்படவில்லை.
சிவப்பு நிறம்: இந்த சிவப்பு நிறக்குறியீடு (சதுரத்திற்குள் முக்கோணம்) இந்த உணவுப் பொருள் அசைவம் என்பதைக் குறிக்கிறது. சைவ உணவு உண்பவராக இருந்தால், இதை வாங்குவதைத் தவிர்க்கவும். (முன்னர் இது வட்டமாக இருந்தது, தற்போது நிறக்குருடு உள்ளவர்களுக்காக முக்கோணமாக மாற்றப்பட்டுள்ளது). இந்த 2 குறியீடுகளும் நுகர்வோருக்குத் தெளிவான வழிகாட்டுதலை வழங்குகின்றன.
மஞ்சள் நிறம்: உணவுப் பொருட்களின் பாக்கெட்டில் உள்ள இந்த வண்ண குறியீடு இந்த தயாரிப்பில் முட்டைகள் இருப்பதைக் குறிக்கிறது. ஒவ்வாமை அல்லது மற்ற காரணங்களால் பலர் முட்டைகளை சாப்பிடுவதை தவிர்க்கிறார்கள், அத்தகையவர்கள் இந்த வண்ண குறியீட்டைப் பற்றி அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்.
நீல நிறம்: பச்சை மற்றும் சிவப்பு வண்ணங்களை தவிர, நீல வண்ணக் குறியீடும் உள்ளது. இந்த தயாரிப்பு மருத்துவ ரீதியாக இணைக்கப்பட்டு உள்ளது என்பதை இந்த வண்ணக் குறியீடு குறிக்கிறது. அதாவது இதை எந்த மருத்துவ நிலையிலும் பயன்படுத்தலாம் மற்றும் மருத்துவரின் ஆலோசனையின்றி பயன்படுத்த வேண்டாம்.
கருப்பு நிறம்: உணவுப் பொருளின் பாக்கெட்டில் கருப்பு அடையாளம் இருந்தால், அந்த தயாரிப்பில் அதிக அளவு ரசாயனங்கள் உள்ளன என்று அர்த்தம். இது சுவையை அதிகரிக்க, நிறம் கொடுக்க அல்லது நீண்ட நேரம் கெட்டுப்போகாமல் தடுக்க சேர்க்கப்படுகிறது. இத்தகைய உணவை அதிக அளவில் உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அத்தகைய வண்ணக் குறியீடு கொண்ட தொகுக்கப்பட்ட உணவை வாங்குவதைத் தவிர்க்கவும். எனவே, குழப்பமடையாமல், அதிகாரப்பூர்வ குறியீடுகளை மட்டும் கருத்தில் கொண்டு உங்கள் உணவுத் தேர்வுகளை மேற்கொள்ளுங்கள்.