வறுத்த கரப்பான் பூச்சிகளை உண்ணுவது முதல் மெலிதான புழுக்கள் வரை, ஓரியண்டல் சுவையான உணவுகளை சாப்பிடுவது உங்கள் அண்ணத்தை வெறுமனே திகைக்க வைக்கும். அதேபோல இந்த ஃபுகு(Fugu) அல்லது ப்லோஃபிஷ் (Blowfish) ஓரியண்டல் உணவு வகைகளில் மிகவும் பிரபலமானது அதே சமயம் ஆபத்தான உணவும கூட. ஆனால் இது நிச்சயமாக பலவீனமான இதயம் கொண்டவர்களுக்கு அல்ல! இந்த உணவின் சிறப்பு என்ன? மிகவும் விஷம் உள்ள உணவு எப்படி சாப்பிடக்கூடியதாக மாறுகிறது என்பதை பார்க்கலாம்!
ஃபுகு ஏன் மிகவும் ஆபத்தானது?
ப்லோஃபிஷ் என்றும் அழைக்கப்படும் ஃபுகு மிகவும் ஆபத்தான உணவு வகைகளில் ஒன்றாகும், இது ஜப்பானில் உள்ள ஷிமோனோசெகி Shimonoseki பகுதியைச் சேர்ந்தது.
நிபுணத்துவம் வாய்ந்த சமையல்காரர்களால் மட்டுமே, சரியான முறையில் இதை தயாரிக்க முடியும். இல்லையெனில், இந்த சுவையான மீன் உணவை உட்கொள்வது நச்சுத்தன்மையாகி, உயிருக்கே ஆபத்தாகலாம். இந்த மீன்களில் டெட்ரோடோடாக்சின் (Tetrodotoxin) விஷம் இருப்பதே இதற்குக் காரணம், இது உடலில் வேகமாகச் சுழன்று மரணத்தை உண்டாக்கும்.
இந்த மீனின் பாகங்கள் மிகுந்த நிபுணத்துவத்துடன் பிரிக்கப்பட்டுள்ளன. மேலும் தயாரிப்பில் நிகழும் சிறிய அறியாமை கூட வாயில் உணர்வின்மை, பக்கவாதம் மற்றும் மரணத்தை ஏற்படுத்தும். இன்றுவரை இதற்கு மாற்று மருந்து இல்லை.
இந்த மீன் எப்படி உண்ணக்கூடியதாக மாறுகிறது?
மீன் ஒரு தட்டில் வைக்கப்படுகிறது, பின்னர் அது நச்சுத்தன்மைகள் கவனமாக அப்புறப்படுத்தப்படுகிறது. இந்த ப்லோஃபிஷ், துடுப்புகளுடன் கூடிய வீங்கிய சதுர வடிவ உடலைக் கொண்டுள்ளது. முதலில் தலை கவனமாக வெட்டப்பட்டு மூளை மற்றும் கண்கள் அகற்றப்படுகின்றன.
மீனின் மேல், கீழ் மற்றும் பக்காவாட்டில் இருந்து பச்சை நிற தோல் அகற்றப்படும். பின்னர் குடல்கள் வெட்டப்பட்டு, மீனின் கருப்பைகள் அகற்றப்படுகின்றன. அடுத்தபடியாக அதிக விஷம் உள்ள பகுதியான மீனின் கல்லீரல் மற்றும் குடல் நீக்கப்படுகிறது. “சயனைடை விட இது 200 மடங்கு கொடியது என்று மக்கள் கூறுகிறார்கள். 2000 ஆம் ஆண்டு முதல் ஜப்பானில் அரசாங்க புள்ளிவிபரங்களின்படி ஃபுகுவை உட்கொண்ட 23 பேர் இறந்துள்ளனர்.
இது இன்னும் உண்ணப்படுகிறதா?
16 ஆம் நூற்றாண்டில் ஃபுகு நுகர்வு தடைசெய்யப்பட்டது, இது 1888 வரை தொடர்ந்தது. ஜப்பானின் முதல் பிரதமர் இடோ ஹிரோபூமி’ ஷிமோனோசெகியில் உள்ள ஷுன்பான்ரோ உணவகத்திற்குச் சென்றபோது இந்த சுவையான உணவை முயற்சித்தார். அவர் மீன்களின் மணம் மற்றும் சுவையை மிகவும் விரும்பி, தடையை நீக்க முடிவு செய்தார். இதுதான், ஷிமோனோசெகியை “ஃபுகுவின் வீடு” ஆக்கியது.
ஃபுகு அனுபவத்தைப் பற்றிய அனைத்தும்
ப்ளோஃபிஷைக் கொண்டு செய்யப்படும் உணவுகளை தயாரிப்பதில் அதிகாரப்பூர்வமாக உரிமம் பெற்ற ஜப்பானில் முதல் உணவகம் ஷுன்பான்ரோ என்று நம்பப்படுகிறது. இந்த மீன் சாப்பிடுவதற்கு மிகவும் விரும்பப்படும் சில வழிகள், ஃபுகு மீனின் மெல்லிய துண்டுகளை ஸ்பிரிங் ஆனியன்களுடன் போர்த்தி, வினிகர் மற்றும் சோயா சாஸில் துண்டுகளை நனைத்து அதை அனுபவிப்பதாகும்.
ஃபுகு ஹாட் பாட், ஃபிரைடு ஃபுகு, ஃபுகு ரைஸ் மீல் அல்லது க்ரில்டு ஃபுகு போன்ற பிரபலமான ஃபுகு உணவு வகைகள் உள்ளன.
என்ன உங்களுக்கும் ஃபுகு மீன் சாப்பிட ஆசை வந்து விட்டதா?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”