scorecardresearch

முழுமையாக தடுப்பூசி போட்ட பிறகு கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்வது?

முழுமையாக தடுப்பூசி போட்டவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

முழுமையாக தடுப்பூசி போட்ட பிறகு கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்வது?

லட்சக் கணக்கான அமெரிக்கர்களைப் போலவே, கெவின் கொரோனாவில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள மார்ச் மாதத்தில் கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டார். ஆனால், செவ்வாய்க்கிழமை அமெரிக்காவின் மாசசூசெட்ஸில் உள்ள புரொவின்ஸ் டவுனில் ஒரு வார இறுதி நாளில் நண்பர்களுடன் மதுக்கடைகளுக்குச் சென்றபின், அவருக்கு சளி மற்றும் சில பிரச்னைகள் இருந்தது.

“நான் இதை நியூ இங்கிலாந்தில் வழக்கமான வசந்தகால ஒவ்வாமை என்றுதான் நினைத்தேன்” என்று கெவின், 42, தனது பெயரின் ஒட்டைப் பயன்படுத்தக்கூடாது என்ற நிபந்தனையுடன் பேசினார். தலைவலி, உடல் வலி, தூக்கமின்மை என அறிகுறிகள் மோசமடைந்தது. இது காய்ச்சல் என்று அவரது மருத்துவர் கூறினார். ஆனால், அவர் ஒரு கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு பரிந்துரைத்தார். இதன் விளைவாக பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது.

“கொரோனா உங்களுக்கு இருக்குமா என்று என்று நீங்கள் யோசிக்க கூடாது” என்று கூறிய கெவின் தன்னை புரோவின்ஸ்டவுன் இல்லத்தில் 10 நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்டார்.

அந்த நாள் முடிவில், தடுப்பூசி இன்னும் வேலை செய்தது என்று கூறிய கெவின், “தடுப்பூசி போடுவதற்கு முன்பு கோவிட் தொற்று ஏற்பட்டவர்களைப் போல நான் நோய்வாய்ப்படவில்லை.” என்று கூறினார்.

முழுமையாக தடுப்பூசி போட்டவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

கோவிட் தடுப்பூசிகள் கோவிட்-19ஐ தடுப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருந்தன. குறிப்பாக மருத்துவமனையில் சேர்ப்பது மற்றும் இறப்பு ஆகியவற்றை எதிர்த்து பொதுவாக எதிர்பார்த்தபடி செயல்படுகின்றனஎ என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். தடுப்பூசிகள் வைரஸ் பரவும் அபாயத்தையும் குறைக்கின்றன.

தடுப்பூசி போடப்பட்டவர்கள் வைரஸால் பாதிக்கப்படுவதற்கான ஆபத்து குறைவாக இருந்தாலும், அந்த ஆபத்து ஏற்படும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

“ஆம், இது நடக்கும், வழக்கத்திற்கு மாறாக நடக்கும்” என்று பாஸ்டன் பல்கலைக்கழக பொது சுகாதார பள்ளியின் டீன் டாக்டர் சாண்ட்ரோ கலியா கூறினார்.

இந்த அரிய தொற்றுகள் குணமாகக்கூடிய நோய்த்தொற்றுகள் என்று அழைக்கப்படுகின்றன, மேலும், ஏப்ரல் 30ம் தேதி வரை, 46 அமெரிக்க மாநிலங்களிலும் பிரதேசங்களிலிருந்து 10,000க்கும் மேற்பட்ட நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவிக்கின்றன. கடுமையான அறிகுறிகள் இல்லாவிட்டால் சி.டி.சி இதுபோன்ற தொற்றுநோய்களைப் பதிவு செய்வதை நிறுத்தியுள்ளது. எனவே, லேசான அறிகுறிகள் உட்பட தொற்றுகளின் எண்ணிக்கை பெரும்பாலும் அதிகமாக இருக்கும்.

முழுமையாக தடுப்பூசி போட்ட நபருக்கு தொற்று ஏற்பட்டால் என்ன செய்வது?

முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட நபருக்கு கோவிட்-19 மாதிரி அறிகுறிகள் இருந்தால் அவர்கள் தங்களை மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சி.டி.சி. கூறுகிறது.

“பொதுவாக பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்படுகிற நபரை 10 நாட்களுக்கு தனிமைப்படுத்த வேண்டும்” என்று சி.டி.சி வழிகாட்டுதல்களைக் குறிப்பிட்டுள்ளதாக டாக்டர் கலியா கூறினார்.

நியூயார்க்கில் உள்ள நியூ ஹைட் பூங்காவில் உள்ள நார்த்வெல் ஹெல்த் நிறுவனத்தின் குளோபல் ஹெல்த் இயக்குனர் டாக்டர் எரிக் சியோ-பினா, தடுப்பூசிகள் போடுவதற்கு முன்பு தொற்று உறுதி செய்யப்பட்டவருக்கான வழிகாட்டுதல்களில் இருந்து இது மிகவும் வேறுபட்டது அல்ல என்று கூறினார்.

“நீங்கள் இன்னும் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று கூறிய அவர், “உங்கள் மன அமைதி கொஞ்சம் நன்றாக இருக்கும் என்ற புரிதலுடன் நீங்கள் இன்னும் தொடர்பு தடத்தை அறிய வேண்டும்.” என்று கூறினார்.

“மக்கள் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தங்கள் சுகாதார பணியாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும். மருத்துவரிடம் செல்ல நீங்கள் வீட்டை விட்டு வெளியேறினால், முகமூடி அணிந்து சமூக இடைவெளியை கடைபிடியுங்கள்.” என்று டாக்டர் கலியா கூறினார்.

“அடிப்படையில், யாராவது தனிமைப்படுத்திக்கொண்ட பின்னர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றால் சுகாதார பராமரிப்பாளரிடம் ஆலோசிக்கலாம்” என்று டாக்கர் கலியா கூறினார்.

தொற்று ஏற்பட்டவரின் வீட்டில் உள்ளவர்களின் நிலை என்ன?

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் ஒரு தனி அறையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அல்லது முடிந்தால் தனி குளியலறையைப் பயன்படுத்த வேண்டும். முடிந்தால், நோய்வாய்ப்பட்ட நபருக்கும் மற்ற வீட்டு உறுப்பினர்களுக்கும் இடையில் 6 அடி இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று சி.டி.சி. கூறியுள்ளது.

இடைவெளியை கடைபிடிப்பது மிகவும் முக்கியமானது, ஏனெனில் தொற்று பாதிக்கப்பட்ட நபர் – அறிகுறிகள் இல்லாத ஒருவருடன்- 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அல்லது நோய் எதிர்ப்பு தொடர்பான அல்லது பிற உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக தடுப்பூசி பெற முடியாத நபர்கள் உட்பட நோய்த்தொற்று இல்லாத ஒருவருக்கு வைரஸை பரப்ப முடியும்.

தொற்று ஏற்பட்டவர் பேசும்போது, ​​இருமும்போது அல்லது தும்மும்போது உருவாகும் சுவாச நீர்த்துளிகல் மூலம் நெருங்கிய தொடர்பு கொண்ட நபர்களிடையே கொரோனா வைரஸ் பரவுகிறது என்று சிடிசி குறிப்பிட்டது. ஒரே அறையைப் பகிர்ந்து கொள்ளும் மக்களிடையே சுவாச துளிகள் மூலம் இந்த வைரஸ் பரவுகிறது.

ஆனால், சியோ-பினா கூறுகையில், மூக்கு மற்றும் சுவாச நீர்த்துளிகளில் வைரஸின் அளவு தடுப்பூசி போடப்பட்டவருக்கு வைரஸ் தொற்றின் அளவு அதிகமாக இல்லை.

“அனேகமாக அவர்கள் அதை பரப்பப் போவதில்லை” என்று அவர் கூறினார்.

யாராவது உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் அல்லது பரிசோதனையில் கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டால் வீட்டில் உள்ளவர்கள் அந்த நபர் அடிக்கடி வீட்டில் தொட்ட இடங்களை கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.

வீடுகளில் புதிய காற்றோட்டத்திற்காக மின்விசிறிகள் மற்றும் திறந்த கதவுகள் மற்றும் ஜன்னல்களை இயக்க இது உதவியாக இருக்கும். மேலும் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் வீட்டு உபயோகப் பொருட்களான பாத்திரங்கள், கப் மற்றும் துண்டுகள் போன்றவற்றைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று சி.டி.சி. அறிவுறுத்துகிறது.

குணமடையக் கூடிய அறிகுறிகள் எவ்வளவு தீவிரமானவை?

நோய்த்தொற்றுக்குள்ளான ஒருவருக்கு லேசான அறிகுறிகள் இருக்கலாம் அல்லது அறிகுறிகள் எதுவும் இல்லாமலும் இருக்கலாம் என்று சியோ-பினா கூறினார்.

“தடுப்பூசி போட்ட பிறகு, கோவிட் தொற்று ஏற்படுவது என்பது குறித்து மிகவும் குறைவான அச்சமே இருக்கிறது” என்று கூறிய சியோ பினா, “பெரும்பான்மையான மக்களுக்கு – 99.9% நேரம் – நான் நன்றாக இருக்கப் போகிறேன். நான் ஒரு லேசான தொற்றைப் பெறப்போகிறேன். எனக்கு தெரியாமல்கூட போகலாம்” என்று இருப்பதாகக் கூறினார்.

மிகவும் கடுமையான அறிகுறிகளில் மூக்கு ஒழுகுதல் மற்றும் லேசான உடல் வலி அடங்கும் என்று நியூயார்க்கில் பே ஷோரில் உள்ள சவுத் ஷோர் பல்கலைக்கழக மருத்துவமனையின் குழந்தை தொற்று நோய் நிபுணர் டாக்டர் சுனில் சூட் தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Fully vaccinated people who later test positive for covid 19 what should you do