என் அம்மா கட்டுன வீடு.. 25 வருஷமா இங்க தான் என்னோட நினைவுகள் நிறைஞ்சிருக்கு- சுந்தரி கேப்ரியெல்லா திருச்சி ஹோம் டூர்

இதுதான் எங்க திருச்சி வீடு. என் மனசுக்கு ரொம்ப நெருக்கமான இடம் இது. 2000-ல எங்க அம்மா இந்த வீட்டைக் கட்டினாங்க. கடந்த 25 வருஷமா இங்கதான் என் சின்ன வயசு, என் அண்ணனோட சேட்டை, எல்லாமே நிறைஞ்சு இருக்கு.

இதுதான் எங்க திருச்சி வீடு. என் மனசுக்கு ரொம்ப நெருக்கமான இடம் இது. 2000-ல எங்க அம்மா இந்த வீட்டைக் கட்டினாங்க. கடந்த 25 வருஷமா இங்கதான் என் சின்ன வயசு, என் அண்ணனோட சேட்டை, எல்லாமே நிறைஞ்சு இருக்கு.

author-image
WebDesk
New Update
wmremove-transformed (7)

Gabriella Sellus trichy home tour sundari serial Gabriella

சின்னத்திரை ரசிகர்களின் மனதை வென்ற நடிகை கேப்ரியெல்லா செல்லஸ், 'சுந்தரி' சீரியல் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர். தற்போது தனது சொந்த ஊரான திருச்சியில் உள்ள பிரம்மாண்டமான வீட்டை ரசிகர்களுக்காக சுற்றிக் காட்டியுள்ளார்.

இந்த வீடியோவில், கேப்ரியெல்லா தனது வீட்டின் ஒவ்வொரு பகுதியையும் ரசனைக்குரிய வகையில் காட்டுகிறார். 

Advertisment

இதுதான் எங்க திருச்சி வீடு. என் மனசுக்கு ரொம்ப நெருக்கமான இடம் இது. 2000-ல எங்க அம்மா இந்த வீட்டைக் கட்டினாங்க. கடந்த 25 வருஷமா இங்கதான் என் சின்ன வயசு, என் அண்ணனோட சேட்டை, எல்லாமே நிறைஞ்சு இருக்கு.

நடிப்புன்னா எனக்கு எப்பவுமே ரொம்ப இஷ்டம். அஞ்சு, ஆறு வயசுல இருந்தே எனக்குள்ள அந்த ஆர்வம் இருந்துச்சு. ஆனா, கேமரா முன்னாடி நிக்கிறதுக்கு அப்போ பயப்படுவேன். இப்போ, அதே கேமரா முன்னாடி தைரியமா நிக்கிறேன். அதுவும், 'சுந்தரி' சீரியல் எனக்குக் கொடுத்த பெரிய அங்கீகாரம். என் முதல் சம்பாத்தியத்துல நான் வாங்கின ஒரு முக்கியமான பொருள், இந்த சோஃபா செட்தான். ரொம்ப பெருமையா இருக்கு!

Advertisment
Advertisements

வீட்டுக்குள்ள என் அண்ணன் அந்தோணியோட கைவண்ணம் நிறையவே இருக்கு. வீட்டின் இன்டீரியர் டிசைன் எல்லாமே அவர்தான் பொறுப்பேத்து பண்ணினார். அவரோட கற்பனைக்கு ஒரு பெரிய சல்யூட்! என் குடும்பத்தை பத்தி சொல்லனும்னா, எனக்கு ஒரு அண்ணன் இருக்காரு. அவருக்கு கல்யாணம் ஆகி ரெண்டு குழந்தைங்க இருக்காங்க. அவர் TCS-ல வேலை பாக்குறாரு. இங்க என் கூடவே எப்பவும் இருக்கிற என் செல்ல குட்டி பசங்க சிம்பா, பார்பி. என் ரெண்டு குட்டி ராஸ்கல்களையும் பாருங்க. அவங்க தான் என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்.

அப்புறம், வீட்டுக்கு வந்ததும் உங்களை வரவேற்றது என் ரெண்டு செல்லப் பிராணிகள் - சிம்பா, பார்பி. பார்பிக்கு நாலு வயசு, சிம்பாவுக்கு ரெண்டு வயசு. பார்பிக்கு ஏன் அந்தப் பேர் வெச்சோம்னு ஒரு குட்டி ரகசியம் இருக்கு. 'சுந்தரி' சீரியல் ஷூட்டிங் அப்போ ஸ்நாக்ஸ் கொடுத்தாங்க, அதுல ஒரு ஸ்நாக்ஸ் பேர்தான் பார்பி. அப்போ இருந்தே என் செல்லக்குட்டிக்கு பார்பிதான்னு முடிவு பண்ணிட்டேன்.

வாழ்க்கை இப்போ ரொம்ப சந்தோஷமா போயிட்டு இருக்கு. முக்கியமா, என் உலகம் இப்போ என் மகள் அகிரா சுத்தித்தான் இருக்கு. அவளுக்கு இப்போ 108 நாள் ஆகுது. அவளுக்காக நான் தனியா ஒரு உலகம் அமைச்சிருக்கேன். அந்த உலகம்தான் என்னோட இப்போதைய சந்தோஷத்தோட மையம்!” என்று சந்தோஷம் பூரிக்க கூறுகிறார் கேபிரியல்லா….

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: