Gandhi Jayanti 2019 Mahatma Gandhi Quotes , Status, Messages, Images : இன்று இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களின் 150வது பிறந்த தினமாகும். குஜராத் மாநிலம் போர்பந்தரில் அக்டோபர் மாதம் 2ம் தேதி 1869ம் ஆண்டு மோகன்தாஸ் கர்ம்சந்த் காந்தி பிறந்தார். வன்முறையற்ற, அகிம்சை போராட்டங்கள் மூலமாக இந்திய விடுதலைக்கு வித்திட்டவர் மகாத்மா காந்தி. மக்கள் அவரை மகாத்மா என்றும், அவர் மீது வைக்கப்பட்டிருக்கும் மரியாதை காரணமாகவும் பாபு என்று செல்லமாக அழைக்கப்பட்டார் காந்தி.
Gandhi Jayanti 2019 Mahatma Gandhi Quotes
இன்று அண்ணலின் 150வது பிறந்த தினம் ஆதலால் நாடு முழுவதும் சிறப்பு நிகழ்வுகள் மற்றும் விழாக்களை ஏற்படு செய்துள்ளது மத்திய அரசு. தூய்மை இந்தியா திட்டம் தொடர்ந்து, இம்முறை ப்ளாஸ்டிக் அற்ற, தூய்மையான ஆரோக்கியமான, சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத இந்தியாவை உருவாக்கும் முயற்சி குறித்து இந்த வாரம் நடைபெற்ற மன் கீ பாத் நிகழ்வில் மோடி பேசினார்.
மகாத்மா காந்தி பொன்மொழிகள்
அண்ணலின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் கூறிய பொன்மொழிகள் சிலவற்றை இங்கு காண்போம்.
மகாத்மா காந்தியின் பிறந்த நாள் அன்று, அவரின் விருப்பம் போல் அகிம்சை வழியில் நின்று, மனம் துவண்டு போகாமல் நமக்கான தேவைகளுக்காக உழைப்போம் அண்ணல் வழி நின்று.