Advertisment

மகாத்மா வாரிசுகளின் தயக்கம்

Mahatma’s descendants reticent: இப்போது 85 வயதான பட்டாச்சார்ஜி, டெல்லியின் பஞ்சசீல பூங்காவில் உள்ள தனது வீட்டில் படுக்கை அறையில் சாய்ந்தபடி, அவர் தனது தாத்தாவுட தேசிய தலைநகரத்தில் கழித்த காலத்தின் கதைகளைச் சொல்கிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Mahatma Gandhi, Gandhi Jayanti, October 2, Gandhi 150 birth anniversary, descendants of Mahatma Gandhi, notoriously reticent descendants of the Mahatma, Tara Gandhi Battacharjee, 2 october, மகாத்மா காந்தி, காந்தி 150வது பிறந்தநாள், காந்தி சந்ததியினர், அக்டோபர் 2, speech on gandhi jayanti, gandhi jayanti speech in tamil, gandhi jayanti speech in english, oct 2, 2 october speech, gandhi jayanti quiz, mahatma gandhi birthday, 2nd october 2019 gandhi jayanti, gandhi jayanti images, gandhi jayanti 2019

Mahatma Gandhi, Gandhi Jayanti, October 2, Gandhi 150 birth anniversary, descendants of Mahatma Gandhi, notoriously reticent descendants of the Mahatma, Tara Gandhi Battacharjee, 2 october, மகாத்மா காந்தி, காந்தி 150வது பிறந்தநாள், காந்தி சந்ததியினர், அக்டோபர் 2, speech on gandhi jayanti, gandhi jayanti speech in tamil, gandhi jayanti speech in english, oct 2, 2 october speech, gandhi jayanti quiz, mahatma gandhi birthday, 2nd october 2019 gandhi jayanti, gandhi jayanti images, gandhi jayanti 2019

உமா விஷ்ணு, கட்டுரையாளர்

Advertisment

Mahatma’s descendants reticent: அந்த சிறுமி பார்த்ததிலேயே மிகவும் மர்மமானது அந்த சிவப்பு நிற தபால் பெட்டிதான். அதற்கு அளித்த எல்லாவற்றையும் விழுங்கி அது ஆழ்ந்த ரகசிங்களை வைத்திருந்தது. ஒருநாள், எட்டு வயது தாரா தனது தாத்தா மோகன்தாஸ் கரம்சந்த் காந்திக்கு ஒரு கடிதம் எழுதி அந்த பெட்டிக்குள் போட்டாள். விரைவில் பதில் வந்தது. அவளது தாத்தா புனேவில் உள்ள ஆகாகான் அரண்மனையிலிருந்து ‘தாரா’ என்று எழுதினார். அவர் அங்கே சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். “உனது கடிதம் எனக்கு கிடைத்தது. நான் இது ஒரு மோசமான கடிதம் என்று அவசியம் சொல்லவேண்டும். தயவுசெய்து உன்னுடைய கையெழுத்தை மேம்படுத்திக்கொள். மீண்டும் எழுது” என்று இருந்தது.

“நான் திகிலடைந்துவிட்டேன். நான் அதை யாரும் பார்க்க விரும்பவில்லை. அதை கிழித்து வெளியே எறிந்துவிட்டேன். அப்படி செய்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இல்லையெனில் யாராவது அதைக்கண்டுபிடித்து பொதுவில் சொல்லிவிட்டிருப்பார்கள்.” என்று மகாத்மா காந்தியின் மூத்த பேத்தி தாரா காந்தி பட்டாச்சார்ஜி கூறுகிறார். இவர் மகாத்மா காந்தியின் நான்காவது மற்றும் இளையமகன் தேவதாஸ் காந்தியின் மகள்.

இப்போது 85 வயதான பட்டாச்சார்ஜி, டெல்லியின் பஞ்சசீல பூங்காவில் உள்ள தனது வீட்டில் படுக்கை அறையில் சாய்ந்தபடி, அவர் தனது தாத்தாவுடன் தேசிய தலைநகரத்தில் கழித்த காலத்தின் கதைகளைச் சொல்கிறார். அங்கே அவரது தந்தை தி இந்துஸ்தான் டைம்ஸ் எடிட்டராக இருந்தார். அங்கே வார்தாவின் சேவாகிராம் ஆசிரமத்திலும் பிற இடங்களிலும் கழித்த விடுமுறை நாட்களில் பழைய தபால் உறைகளில் இருந்து காந்தியின் குறிப்பேட்டை தயாரித்தார். பாபுஜியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது பற்றி அவர் உணர்ந்த மனக்கசப்பு; அவர் குழந்தையாக இருந்தபோது கரடுமுரடான காதியை வெறுத்தார். ஆனால், டெல்லி பல்கலைக்கழகத்தின் மிராண்டா ஹவுஸில் ஆங்கிலத்தில் இலங்கலை பட்டம் பெற்றபோது அவர் அதை நேசித்தார்.

காந்தி பிறந்த 150வது ஆண்டில் மகாத்மாவின் பிம்பம் மீண்டும் பணியில் அழுத்துவதால் மரபின் சுமை பட்டாச்சார்ஜியின் பலவீனமான தோள்களில் லேசாக அமர்ந்திருக்கிறது. அவருக்கு அவர் வெறும் பாபுதான். “நான் கல்லூரியில் படித்தபோது, என்னுடைய காந்தி தொடர்பை யாரும் பெரிதாகப் புரிந்துகொள்ளவில்லை. பின்னர், ஏன் என்று யோசித்தபோது நான் அந்த காலத்தின் ஒரு தயாரிப்பு மட்டும்தான் என்பதை உணர்ந்தேன். நாடு முழுமையும் சுதந்திர இயக்கத்தில் ஈடுபட்டது. அந்த பெண்கள் அனைவரும் ஒரு அரசியல் நீரோட்டத்திலிருந்து வந்தவர்கள் அல்லது மற்றவைகளில் இருந்து வந்தவர்கள். நான் ஏதோ விசேஷமானவள் போல் இல்லை” என்று பட்டாச்சார்ஜி கூறுகிறார். பின்னர், அவர் சாந்திநிகேதனில் கழித்த ஆண்டுகளில் தான் சந்தித்த ஜோதி பிரசாத் பட்டாச்சார்ஜியை மணந்துகொண்டார்.

அரசியல் பாரம்பரியம் எளிதில் கிடைத்திருக்கிற ஒரு நாட்டில் காந்தியின் சந்ததியினர் பலர் ஆர்வமில்லாமல் உள்ளனர். காந்தியின் பட்டப் பெயர் இப்போது பெரும்பாலும் நேருவின் சந்ததியினருடன் தொடர்புடையதாக உள்ளது. காந்தியின் நேரடி சந்ததியினர் சிலர் மட்டுமே அரசியலில் ஈடுபட்டுள்ளனர். அப்படி செய்தவர்கள் அரசியலில் தோல்வியுற்றனர் அல்லது ஏமாற்றமடைந்தனர்.

“எங்களில் தொண்ணூற்றொன்பது சதவீதம் பேர் சமையலறை மேஜை பிரதமர்கள்” என்று கூறி டாக்டர் ஆனந்த் கோகானி சிரிக்கிறார். இவர் மும்பையில் மருத்துவராக இருக்கிறார். இவர் காந்தியின் மூன்றாவது மகன் ராமதாஸின் மகளும் காந்தியின் இளைய பேத்தியுமான உஷா கோகானியின் மகன். “வேறொருவர் எங்களுக்காக விஷயங்களை மாற்றிக்கொள்வதற்கு காதிருப்பதற்கு பதிலாக நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று நான் வாழும் குடும்பச் சமூகத்திற்கான தேர்தல்களை எதிர்த்துப் போராடியதில்லை.” என்று கோகானி கூறுகிறார்.

“நம் ஒவ்வொருவருக்கும் மகாத்மா காந்தியிடமிருந்து தனித்தனி அடையாளம் உள்ளது” என்று பட்டாச்சார்ஜியின் மகளும் கஸ்தூர்பா காந்தி தேசிய நினைவு அறக்கட்டளையின் அறங்காவலருமான சுகன்யா பாரத் ராம் கூறுகிறார். “நிச்சயமாக சரியான விழுமியங்கள் நம்மில் விதைக்கப்பட்டுவிட்டது. இயற்கையோடு இணக்கமான மனிதர்களின் யோசனை மற்றும் சர்வோதயாவின் கொள்கைகள் போன்றவை அவை. ஆனால், அந்த தலைமுறையின் பெரும்பான்மையான மக்கள் ஒரே மாதிரியான மதிப்புகளுடன் வளர்க்கப்பட்டனர். எனவே,  நாங்கள் வினோதமானவர்கள் அல்ல.”

வருங்காலம் ஒன்று இருந்தால் அது இந்த வம்சாவழியைப் பிணைக்கும். இப்போது கண்டம் முழுவதும் பரவியுள்ளனர். ஒவ்வொரு முறையும் காந்தியின் தொடர்புக்காக அவர்கள் தனிமைப்படுத்தப்படும்போது

இந்த வெறுப்புணர்வு தோன்றும் நாங்கள் காந்தி இல்லை என்று.

காந்தி இந்தியாவுக்குச் சென்றபோது தென்னாப்பிரிக்காவில் தங்கியிருந்த மகாத்மாவின் இரண்டாவது மகனான மணிலாலின் சந்ததியினர் சிலர் காந்தி பெயரைப் பற்றிக் கொண்டதாக குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும் அவர்கள் நீண்ட கால மரபுகளை ஏற்றுக்கொண்டனர். மணிலால் காந்தியின் மகன் அருண் மற்றும் அவரது மகன் துஷார் நீண்டகாலமாக பல்வேறு காந்திய மன்றங்களுடன் தொடர்பு கொண்டுள்ளனர். பிந்தையவர்கள் நியாயமான சர்ச்சையை எதிர்கொண்டனர், இதில் 2009 ஆம் ஆண்டில் மகாத்மாவின் மோன்ட் பிளாங்க் விலை உயர்ந்த பேனாவை அறிமுகப்படுத்தியதும் அடங்கும்.

துஷார் கூறுகையில், “சந்ததியினர் கடமையை" மட்டுமே செய்கிறார்கள்” என்று கூறி குற்றச்சாட்டுகளை விலக்குகிறார். “அவர்களில் சிலர் (சந்ததியினர்) தங்கள் காந்தி தொடர்பை மறைக்க நீண்ட தூரம் செல்கிறார்கள், அதிலிருந்து வரும் பொறுப்பால் கவலைப்படுகிறார்கள்.” என்றும் கூறுகிறார்.

85 வயதில், அவருடைய தந்தை அருண் காந்தி, முன்னாள் பத்திரிகையாளர், தென்னாப்பிரிக்காவில் வளர்ந்து நியூயார்க்கில் வசிக்கும்  அவர் ஒரு நாள் பெய்ரூட் மற்றொரு நாள் டொரொண்டோ என மகாத்மா காந்தியைப் பற்றி பூகோள எல்லைகளைக் கடந்து சென்று பேசுகிறார்.

“நான் இந்த பாரம்பரியத்துக்கு நாம் வெட்கப்பட வேண்டிய காரணத்தை காணவில்லை. இந்த காலத்தைப் பற்றி காந்தி என்ன சொல்லியிருப்பார் என்பதை அறிய மக்கள் தாகத்துடன் உள்ளனர். அவரது செய்தியை மக்களுடன் விளக்குவதும் பகிர்ந்து கொள்வதும் எங்கள் கடமை” என்று அருண் காந்தி கூறுகிறார்.

இருப்பினும், இவருடைய பேத்தியும் துஷாரின் மகளுமான கஸ்தூரி, காந்தி என்ற தனது அடையாளத்துடன் போராட்டங்களில் பங்கு வகிக்கிறார். “ஒரு குழந்தையாக, அக்டோபர் 2 ஆம் தேதி கலைப் போட்டிகள் தொடர்பாக அணுகக்கூடியது காந்தி தாத்தா உருவம் என்றுதான் நான் நினைத்தேன். நான் வளர்ந்தவுடன், கவனம் பெறுவதை எல்லாம் நான் விரும்பவில்லை… அதற்கு நான் தகுதியற்றவள். இது ஒரு அறைக்குச் சென்று சிறந்த இருக்கையைப் பெறுவது போன்றது. மேலும், ஒரு குறிப்பிட்ட நபராக உங்களைப் பற்றிய எதிர்பார்ப்புகள் உள்ளன. குறைபாடுகள் உள்ள ஒரு நபராக அல்ல.” என்கிறார் மும்பை செயிண்ட் சேவியர்ஸில் பொது கொள்கையில் முதுகலைப் பட்டம் பெற்ற கஸ்தூரி. மேலும், அவர், “ஆனால், இப்போது நான் அதை (குடும்ப தொடர்பை) ஒரு சொத்தாக பார்க்கிறேன். இது ஒரு சிறந்த நபராக இருப்பதற்கு எனக்கு உதவுகிறது. ஆனால், அவருடைய கொள்கை ஒருபோதும் சொல்லக்கூடாது. நபர்களின் நடத்தை அவர்கள் அறியப்படும் நிமிடத்தில் மாறுவதை நீங்கள் காணலாம்.” என்கிறார்.

காந்தியைப் பார்த்து பிரமிப்பவர்கள் பெரும்பாலும் அவர்கள் காந்தியைப் பார்க்கவில்லை அல்லது அவர்களுக்கு காந்தி தெரியவில்லை என்று உணரப்படுவதே தொடர்ந்து நடந்து வருகிறது. “யாரோ ஒருவர் ஒருமுறை என்னிடம் கேட்டார்கள். இந்த வண்ணமயமான ஆடைகளை எப்படி அணிய வந்தீர்கள்? எல்லாவற்றிற்கும் மேலாக, காந்தி எப்போதும் வெள்ளை நிறத்தை அணிந்திருந்தார் என்று கூறினார். நான் அவரிடம் சொன்னேன், காந்திஜியின் வெள்ளை நிறத்தில் நீங்கள் வண்ணங்களைக் காணத் தவறிவிட்டீர்கள்.” என்றேன்.

கோகானி கூறுகிறார், “காந்தி எப்படி சாப்பிட வேண்டும், தூங்க வேண்டும், உடை அணிய வேண்டும் என்பது பற்றி முன்முடிவு கருத்துகள் உள்ளன. உடல்நலம் மற்றும் சுகாதாரம் குறித்த காந்திய கருத்துக்களைப் பற்றி பேச அழைக்கப்பட்டு வார்தாவின் காந்திய ஆய்வுகள் நிறுவனத்திற்குச் சென்றபோது, சுமார் நூறு பார்வையாளர்களில் பொதுவாக இரண்டு முதல் மூன்று பேர் இருக்கிறார்கள். அவர்கள் கேட்கிறார்கள் காந்தியின் பெரிய பேரன் ஏன் ஜீன்ஸ் அணிந்திருந்தார். அப்போது, காதி அல்லது அவர் அணிந்திருந்த வேட்டி இந்தியத்தன்மையைக் குறிக்க இன்றியமையாதது என்றும் சூழல் வேறுபட்டது என்பதை நான் விளக்க வேண்டும்.” என்று அவர் கூறுகிறார்.

குடும்பத்தில் பலர் காந்தியுடன் தொடர்பில் இருப்பதற்கு தங்கள் சொந்த வழியைக் கண்டுபிடித்தாலும், கிட்டத்தட்ட அவர்களில் யாரும் தீவிர அரசியலில் இல்லை. மகாத்மா விரும்பியதைப் போலவே, ஒருவேளை - அவர்களில் சிலர் அவர்களுடைய தூரிகையை வைத்துக்கொண்டு வந்தாலும் வெளியே சிதறடிக்கப்பட்டது. ராம்தாஸ் காந்தியின் மூத்த மகள் சுமித்ரா குல்கர்னி இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது, அவர் அவசர காலங்களில் காங்கிரஸை விட்டு வெளியேறி பின்னர் பாஜகவில் சேர்ந்தார். அவர் நீண்ட கால அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார்.

“ஆனால், சுமித்ராவும் நானும் சந்தித்தபோது, நாங்கள் அரசியல் பற்றி அல்ல, சமையல் பற்றி பேசுவோம்” என்று பட்டாச்சார்ஜி சிரிப்போடு கூறுகிறார். 1990 களின் முற்பகுதியில் அவரது இளைய உடன்பிறப்பு ராஜ்மோகன், பேராசிரியர், வரலாற்றாசிரியர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர், ஆம் ஆத்மி கட்சியுடன் ஒரு சுருக்கமான உறவை மேற்கொண்டார், 2014 இல் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

துஷார்கூட 1997-98 தேர்தலில் பம்பாய் வடமேற்கு மக்களவைத் தொகுதியில் சிவசேனாவின் மதுகர் சர்போதருக்கு எதிராக சமாஜ்வாடி கட்சி சார்பில் போட்டியிட்டார். “நான் அரசியலுக்கு நெருங்கி வந்தபோது, அது என்னைப் பயமுறுத்தியது. அது நான் நல்லொழுக்கமுள்ளவன் என்பதால் அல்ல, ஆனால், சோதனைகளுக்கு அடிபணிவேன் என்ற பயம் இருந்தது”என்று கூறுகிறார்.

காந்தி எப்போதுமே தனது குடும்பத்தினருடன் அவரது பக்கத்திலேயே காணப்பட்டாலும், அவரது சந்ததியினர் பெரும்பாலும் சுதந்திரத்திற்குப் பிந்தைய தோற்றத்தில் காங்கிரஸிலிருந்து விலகியே இருக்கிறார்கள். கட்சியிலிருந்தும் அதன் மரபுகளிலிருந்தும் தங்களை வேறுபடுத்திக் கொள்ள போராடிய நேருவின் சந்ததியினருக்கு இது எவ்வாறு மாறுபட்டது என்பதை பலர் சுட்டிக்காட்டுகின்றனர். பட்டாச்சார்ஜி, நிச்சயமாக இந்த மரபுக்காக யார் ஒருவரும் போராடவில்லை. ஏனென்றால், அவருக்கு எல்லாம் இருக்கிறது என்று தெரியும். “குழந்தையாக இருக்கும்போது, நான் மட்டும் அவரை பாபு என்று அழைக்கவில்லை. அவர் எல்லோருடைய பாபுவாக இருக்கிறார் என்று நான் மிகவும் பொறாமைப்பட்டேன். ஆனால், இனி இல்லை. என் பாபு, என் தாத்தா எனக்குத் தெரியும். எனது சகோதரர்கள் (ராஜ்மோகன் மற்றும் கோபால்) ஏதாவது எழுதும்போது தவிர, நான் அவருடைய புத்தகங்களை வைத்திருக்கவோ அல்லது அவருடையதை எதையும் படிக்கவோ மாட்டேன். மகாத்மாவைப் பற்றி ஒரு புத்தகம் எழுதிய ஒரு பிரெஞ்சு எழுத்தாளரிடம் இவ்வளவு விரிவாக எழுதப்பட்ட ஒருவரைப் பற்றி ஏன் எழுதத் தேர்ந்தெடுத்தீர்கள் என்று நான் ஒரு முறை கேட்டேன்… உளவியல் ஆய்வு, பாராட்டப்பட்டது போன்றவை என்றார். மக்கள் காந்தியைப் பற்றி இவ்வளவு சலிப்படைய வேண்டாம்? இது காந்தியின் சோர்வு அல்ல என்று நான் நம்புகிறேன்” என்று அவர் கூறினார்.

அக்டோபர் 2 ஆம் தேதி ரீயூனியன் தீவுகளில் ஒரு விழாவிற்கு வருகை தரும் போது, மரபின் சுமையை அவள் சுமக்கமாட்டாள். “உங்களைப் போலவே இந்த நாட்டிற்கும் நான் மட்டுமே பொறுப்பு. அதற்கு மேல் ஒன்றும் இல்லை, குறையும் இல்லை. ” என்று கூறினார்.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிப்பதற்கு: https://indianexpress.com/article/express-sunday-eye/gandhi-150-years-what-in-a-name-gandhi-family-6034117/

தமிழில் - பாலாஜி எல்லப்பன்

India Mahatma Gandhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment