Ganesh Chaturthi Images, Vinayagar Chathurthi 2019 wishes: விநாயகர் சதுர்த்தி இன்று தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. முக்கிய கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர். நண்பர்கள், உறவினர்களுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் குடும்பம், குடும்பமாய் மக்கள் திரண்டு வழிபாடு நடத்தினர். சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அதிகாலையிலேயே திரண்ட பக்தர்கள் தேங்காய் உடைத்தும் கொழுக்கட்டை படையலிட்டும் வழிபட்டனர். இதைத் தொடர்ந்து தீர்த்தவாரியும் நடைபெற்றது.
Happy Ganesh Chaturthi 2019 Images; விநாயகர் சதுர்த்தி, தலைவர்கள் வாழ்த்து
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் புதுச்சேரி மட்டுமல்லாது திரளான தமிழக பக்தர்கள் பங்கேற்றனர். திண்டுக்கல் மாநகரின் மையப்பகுதியான கோபாலசமுத்திரக்கரையில் அமைந்துள்ள நன்மை தரும் 108 விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அந்த ஆலய வளாகத்தில் உள்ள மிகப்பெரிய கருங்கல்லால் ஆன 32 அடி உயரம் கொண்ட மஹா சங்கடஹர சதுர்த்தி விநாயகருக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர், திருமஞ்சனம் உள்ளிட்ட 16 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
திருச்சி மலைக்கோட்டை விநாயகர் கோவிலிலும் சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கோவை புளியகுளம் முக்தி விநாயகர் கோவிலில் அதிகாலையிலேயே விநாயகருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது. சென்னையில் விநாயகர் கோவில்களில் அதிகாலையிலேயே பக்தர்கள் வழிபாடு நடத்தினர். மயிலாப்பூர் லஸ் கார்னரில் நவசக்தி விநாயகர் கோவிலில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உள்பட பலரும் வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.