Advertisment

வீடுகளில் விநாயகர் பூஜை எப்படி நடத்துவது? உகந்த நேரம் என்ன?

Ganesh chaturthi puja at home: விநாயகரை ‘மோதகப் பிரியன்’ என்று கூறுவார்கள். அதனால் அவருக்கு பிடித்த மோதகத்தை தயாரித்து அவருக்கு பிரசாதமாக வைக்கலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
வீடுகளில் விநாயகர் பூஜை எப்படி நடத்துவது? உகந்த நேரம் என்ன?

Ganesh Chaturthi pooja timing tamil news

Ganesh Chaturthi pooja timing tamil news: விநாயகர் பிறந்த தினத்தை தான் நாம் விநாயகர் சதுர்த்தி தினமாக இந்தியா முழுவதும் கொண்டாடி வருகிறோம். இதற்கு ஒரு சுவாரஸ்யமான கதை உள்ளது. பிரம்மா ஒரு சமயம் கொட்டாவி விடவே அதில் இருந்து சிந்தூரனன் என்ற ஓர் அரக்கன் தோன்றினான். அவனுடைய சிவந்த தேகத்தைப் பார்த்து பயந்த பிரம்மா, முன்னெச்சரிக்கையாய் அவன் கேட்காமலேயே அவனுக்கு சில வரங்களைத் தந்தார். கேட்காமலேயே வரம் கிடைத்த மமதையில் மூவுலகையும் ஆட்டிப் படைத்தான் அரக்கன். மும்மூர்த்திகளே செய்வதறியாமல் திகைக்க கணபதியைப் பணிந்தனர். விநாயகர் உடனே தோன்றி, “கவலை வேண்டாம். நான் உமா தேவியாரின் திருவயிற்றில் அவதரிப்பேன்” எனக் கூறி மறைந்தார்.

Advertisment

கருவுற்று உமாதேவியாரின் திருவயிற்றில், காற்றாக நுழைந்த சிந்தூரானன் குழந்தையின் தலையைத் திருகி எடுத்துக் கொண்டு போய் விட, தலையே இல்லாமல் பிறந்த குழந்தையைப் பார்த்து அனைவரும் பதறவே கலங்காதே என்று சொன்ன சிவபெருமான் முன்பொரு சமயம் கஜமுகாசுரன் கேட்டுக் கொண்டபடி அவனுடைய தலையைத் தன் குழந்தையின் தலை இருக்கும் இடத்தில் பொருத்தினார். கஜானனன் ஆனார் விநாயகப் பெருமான்.

ஒவ்வொரு ஆண்டும் வீதிகளில் முக்கிய இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து பக்தர்கள் வழிபடுவார்கள். பின்னர் 10 நாள் பூஜைக்கு பிறகு, அருகில் உள்ள நீர்நிலைகளுக்கு ஊர்வலமாக சிலைகளை எடுத்துச் சென்று கரைப்பார்கள். இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக வீடுகளில் வழிபாடு நடத்த தமிழக அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது.

publive-image Ganesh Chaturthi pooja timing tamil news

Ganesh Chaturthi pooja timing: விநாயகர் சதுர்த்தி பூஜை நேரம்

ட்ரிக் பஞ்சாங்கத்தின் படி விநாயகர் சதுர்த்தி திதி ஆகஸ்ட் 21-ம் தேதி இரவு 11.02 மணிக்கு தொடங்கி, 22-ம் தேதி இரவு 7.57-க்கு முடிகிறது. விநாயகர் சதுர்த்தி தினமான 22-ம் தேதி மத்தியான பூஜைக்கு உகந்த நேரம் பகல் 11.06 முதல் 1.42 வரை ஆகும். விநாயகரை சிவப்பு வண்ண துணியில் வைத்து வழிபட வேண்டும் என்கிறது ஐதீகம்.

வீட்டின் பூஜை அறையில் சிலையை வைக்க வேண்டும். விநாயகருக்கான பூஜை செய்து, கீர்த்தனைகள் பாடி அடுத்த 10 நாட்கள் விநாயகரை வழிபட வேண்டும். அந்த 10 நாட்களும் தினமும் காலையில் விளக்கேற்றி, பூக்களால் தொடுக்கப்பட்ட மாலை அணிவித்து விநாயகரை வழிபடலாம்.

விநாயகருக்கு பூக்கள், பழங்கள், பிரசாதம் ஆகியவற்றை படைக்கலாம். விநாயகரை ‘மோதகப் பிரியன்’ என்று கூறுவார்கள். அதனால் அவருக்கு பிடித்த மோதகத்தை தயாரித்து அவருக்கு பிரசாதமாக வைக்கலாம். கொழுக்கட்டை அல்லது உங்களால் முடிந்த எந்த ஒரு பிரசாதத்தையும் அவருக்கு படைக்கலாம். ஆரத்தி காண்பித்து அவருடைய ஆசிர்வாதத்தை பெற்றுக் கொள்ளலாம் .

Ganesh Chaturthi 2020: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் வாழ்த்துப் படங்கள் – நன்மை உண்டாகட்டும்!

விநாயகர் சதுர்த்தியை இந்த ஆண்டு பாதுகாப்பாக இல்லங்களிலேயே கொண்டாடுவது உத்தமம். முறைப்படி திறக்கப்பட்ட கோவில்களுக்கும் சென்று விநாயகர் அருள் பெறலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

 

Vinayagar Chathurthi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment