Advertisment

இன்று விநாயகர் சதுர்த்தி: வண்ண வாழ்த்துப் படங்கள்

Vinayagar Chathurthi Wishes: விநாயகரின் எலியைப் போன்று நமது பிரச்சனைகளும், அவருக்குப் படைக்கும் கொழுக்கட்டைகளைப் போன்று நமது இனிமையான தருணங்களும் அமைய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்…

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இன்று விநாயகர் சதுர்த்தி: வண்ண வாழ்த்துப் படங்கள்

Ganesh Chaturthi, wishes images

Ganesh Chaturthi tamil News, Ganesh Chaturthi wishes, images: இந்து மதத்தில் முழு முதல் கடவுளாகக் கருதப்படும், விநாயகரின் பிறந்தநாள் தான் விநாயகர் சதுர்த்தி. இந்த விழா ஆண்டுதோறும் இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகிறது. அப்பம், கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, சர்க்கரைப் பொங்கல், சுண்டல், கொய்யாப்பழம் போன்றவற்றை விநாயகருக்கு படைத்து வழிபட வேண்டும். மேலும், அருகம்புல், மல்லிகைப்பூ, எருக்கம்பூ ஆகியவை படைக்கப்பட வேண்டும்.

Advertisment

இந்த நாளில், நண்பர்கள், சகோதர்கள் என்று அனைவரும் ஒன்றிணைந்து களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகரை வாங்கி வந்து, வீடு அல்லது பொதுவான ஒரு இடத்தில் வைத்து அதற்கு வழிபாடு செய்வது வழக்கம். மேலும், வாழை மரம், மா இலை தோரணமும் கட்டி விநாயகருக்கு வழிபாடு நடத்துவது வழக்கமான ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால் நாட்டில் கொரோனா தலைவிரித்தாடும் சூழலில், இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி, ஊர்வலங்கள் ஏதுமின்றி அவரவர் வீட்டிலேயே வழிபடும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆகவே அனைவரும் அதிர்ஷ்டம் மற்றும் செல்வ செழிப்போடு வாழ முழு முதல் கடவுளான விநாயகரை வணங்கி அருள் பெற்றிடுக.

publive-image Ganesh Chaturthi tamil News Ganesh Chaturthi wishes images vinayaka chaturthi puja- விநாயகர் சதுர்த்தி வாழ்த்துப் படங்கள்

எவ்வளவு சாப்பிட்டும் விநாயகருக்கு பசி அடங்காது அது போன்று எல்லையில்லா மகிழ்ச்சியுடனும், பல வாகனங்களைக் கொண்ட விநாயகரைப் போன்று கடைசி ஆயுள் வரையிலும், விநாயகரின் எலியைப் போன்று நமது பிரச்சனைகளும், அவருக்குப் படைக்கும் கொழுக்கட்டைகளைப் போன்று நமது இனிமையான தருணங்களும் அமைய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்…

publive-image Ganesh Chaturthi tamil News Ganesh Chaturthi wishes images vinayaka chaturthi puja- விநாயகர் சதுர்த்தி வாழ்த்துப் படங்கள்

கூர்மையான வாகனம் மற்றும் வலிமை வாய்ந்த உடலை கொண்ட இறைவன் வெற்றிகரமாக நமது பாதையில் இருக்கும் அனைத்து தடைகளையும் அகற்ற இந்த விநாயகர் சதுர்த்தியில் அவரது அருளை பெற்றிட வாழ்த்துக்கள்…

publive-image Ganesh Chaturthi tamil News Ganesh Chaturthi wishes images vinayaka chaturthi puja- விநாயகர் சதுர்த்தி வாழ்த்துப் படங்கள்

தீமையை அழித்து உங்களிடம் அன்பு செலுத்தவும், வானத்தில் இருந்து உங்களுக்கு ஆசிர்வாதங்களை அள்ளித்தரவும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்…

publive-image Ganesh Chaturthi tamil News Ganesh Chaturthi wishes images vinayaka chaturthi puja- விநாயகர் சதுர்த்தி வாழ்த்துப் படங்கள்

 

Vinayagar Chaturthi wishes

விநாயகர் சதுர்த்தி வழிபாட்டில் என்னென்ன அம்சங்கள் இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்,

அக்ஷதை

விநாயகரின் ஆசீர்வாதத்தைப் பெற, அவரது வழிபாட்டில் அக்ஷதை முக்கியம். அக்ஷதை என்றால் அரிசி. இந்த அரிசி விநாயகர் வழிபாட்டில் மிக முக்கியமானது. கணபதியை வணங்குவதற்கு முன், கணபதியை தண்ணீரில் கழுவிவிட்டு, ‘இடாம் அக்ஷதம் கண கண்பத்தே நம’ என்ற மந்திரத்தை உச்சரித்து வணங்குங்கள்.

குங்குமம்

ஸ்ரீ விநாயகர் பூஜையின் வழிபாட்டில் குங்குமம் மிகவும் அவசியம். பூஜையில் குங்குமத்தை நல்லதாக கருதப்படுகிறது. எந்தவொரு தீய சக்தியும் அல்லது எதிர்மறை ஆற்றலும் அதன் பயன்பாட்டின் மூலம் வீட்டிற்குள் நுழைவதில்லை. கணபதி பூஜைக்கு இந்த குங்குமம் வழங்கப்படும் போது,​ அதிலிருந்து மிகவும் நல்ல முடிவுகள் பெறப்படுகின்றன.

அருகம்புல்

அருகம்புல்லை பிள்ளையார் புல் என்று அழைப்பார்கள். வீடுகளில் அருகை சாணம் அல்லது மஞ்சளில் நட்டு வைத்து வணங்குவார்கள். மேலும் எந்த ஒரு பூஜையின் போதும், இந்த அருகம்புல் இல்லாமல் பூஜை நடந்ததில்லை.

எருக்கம் பூ

எருக்கம் பூ விநாயகருக்கு பிடித்த மற்றொரு பூ. மாதுளையின் இலைகள் இந்தியாவின் சில பகுதிகளில் மாதுளையின் இலைகள் மற்றும் பூக்களைக் கொண்டு பூஜைகள் செய்வார்கள். விநாயகர் சதுர்த்தியன்று சில இடங்களில் இந்த பூ மற்றும் இலைகளைக் கொண்டு பூஜைகளை மேற்கொள்வார்கள்.

கொழுக்கட்டை

விநாயகர் சதுர்த்தி நாளில் கொழுக்கட்டை விநாயகருக்கு படைக்க வேண்டிய முக்கிய அம்சம். தேங்காய், வெல்லப்பாகு, அரிசி மாவால் செய்யப்படும் கொழுக்கட்டை இல்லாத விநாயகர் வழிபாடு ஏது!

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Vinayagar Chathurthi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment