பீன்ஸ் நடவு செய்வதற்கும், பராமரிப்பதற்கும், அறுவடை செய்வதற்கும் மிகவும் எளிதானது. ஒருவேளை நீங்கள் இப்போதுதான் செடிகளை வளர்க்கீறீர்கள் என்றால் உங்களுக்கு ஏற்ற தாவம் இதுதான். பீன்ஸ் மிகவும் சத்தானது என்பது உங்கள் தோட்டத்தில் அவற்றை சேர்க்க இன்னும் ஒரு காரணம்.
பீன்ஸ் வளர குறைந்த இடத்தையே எடுத்துக்கொள்கிறது, இதை எப்படி வளர்ப்பது என்பது இங்கே:
/indian-express-tamil/media/media_files/WWIuYdju75YIP0VKuS7H.jpg)
பீன்ஸ் சூரியன் மற்றும் நிழல் இரண்டிலும் செழித்து வளரக்கூடியது. விதைகளை நடுவதற்கு அதிக அல்லது பகுதியளவு சூரிய ஒளி உள்ள இடத்தை தேர்வு செய்யவும். உங்கள் தோட்டங்களில் நேரடியாக நடப்பட வேண்டிய சில தாவரங்களில் பீன்ஸ் ஒன்றாகும்.
ஏனென்றால், பீன்ஸ் மிகவும் மென்மையான வேர் அமைப்பைக் கொண்டிருப்பதால், இடமாற்றத்தின் போது எளிதில் சேதமடையலாம். எனவே, நீங்கள் எப்போதும் நேரடியாக தரையில் விதைக்க வேண்டும். விதைகளை ஒன்றுகொன்று குறைந்தது 3 அங்குல இடைவெளி மற்றும் ஒரு அங்குல ஆழத்தில் நடவும்.
அதை முறையாக மண்ணால் மூடி, தொடர்ந்து தண்ணீர் பாய்ச்சவும். உங்கள் பீன்ஸ் நடவு செய்த 1-2 மாதங்களில் அறுவடைக்கு தயாராக இருக்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“